வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடக்கம்! ஆட்டோ, ரியல் எஸ்டேட் பங்குகள் லாபம்!

இன்றைய பங்குச்சந்தைகள் வர்த்தக நிலவரம் பற்றி...

News image

பங்குச்சந்தை - ANI

Updated On :25 ஜூன் 2026, 10:00 am IST

கச்சா எண்ணெய் விலை சரிவால் பங்குச்சந்தைகள் இன்று(ஜூன் 25) உயர்வுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 77,391.07 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 10 மணியளவில் சென்செக்ஸ் 517.46 புள்ளிகள் உயர்ந்து 77,482.22 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 151.75
புள்ளிகள் உயர்ந்து 24,173.40 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.56 சதவீதம், ஸ்மால்கேப் குறியீடு 0.36 சதவீதம் உயர்ந்து வர்த்தகமாகிறது.

நிஃப்டி 50 பங்குகளில் இன்டர்குளோப் ஏவியேஷன், ஸ்ரீராம் ஃபைனான்ஸ் மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் லாபமடைந்துள்ளன.

துறைவாரியாக நிஃப்டி பார்மா, மீடியா குறியீடுகள் சரிந்தும் ஆட்டோ, ரியல் எஸ்டேட் என இதர குறியீடுகளின் பங்குகள் அனைத்தும் உயர்ந்தும் வருகின்றன.

சென்செக்ஸ் 30 பங்குகளில் இண்டிகோ, எம்&எம், டிசிஎஸ், மாருதி சுசுகி, ஹெச்சிஎல் டெக் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 2.21 சதவீதம் வரை உயர்ந்து முன்னிலை வகித்தன.

மறுபுறம், சோமேட்டோ, பெல், பவர் கிரிட், டைட்டன், அதானி போர்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 1.03 சதவீதம் வரை சரிந்து வர்த்தகமாயின.

பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 0.5% குறைந்து 73.34 டாலராக உள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 94.25 ஆக உள்ளது.

நேற்றும் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Stock Market: Sensex gains 500 pts; Nifty tops 24,150

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.