வாரத்தின் முதல்நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளது.
இதன்படி, மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 1,169.91 புள்ளிகள் வரை உயர்ந்து 76,697.86 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. அதேசமயம் தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 349.70 புள்ளிகள் வரை உயர்ந்து 23,972.60 புள்ளிகளில் வர்ததகமாகி வருகிறது.
அமெரிக்கா - ஈரான் இடையே எட்டப்பட்ட அமைதி ஒப்பந்தம் மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி ஆகிவற்றின் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடங்கியுள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
இதேபோல் உலகளாவிய சாதகமான சூழலால் மற்ற ஆசிய பங்குச்சந்தைகளும் இன்று ஏற்றத்துடனேயே தொடங்கின. மேலும இந்த அமைதி ஒப்பந்தத்தின் எதிரொலியாக, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 41 காசுகள் வலுவடைந்து 94.70 ஆகத் தொடங்கியது.
Summary
Indian stock markets opened sharply higher on Monday as global sentiment improved following reports of the Iran-US agreement and easing crude oil prices. Sensex surged 1,155 points, Nifty moved closer to 24,000, while the rupee strengthened.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 800 புள்ளிகள் உயர்வு; ரியல் எஸ்டேட், ஆட்டோ பங்குகள் லாபம்!

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்வு! ஐடி, பார்மா பங்குகள் லாபம்!

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 789, நிஃப்டி 277 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!








