ரெட்மி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் இன்று (ஜூன் 16) அறிமுகமாகியுள்ளது. ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.
டர்போ வரிசையில் இந்தியாவில் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும். புத்தம் புது வடிவமைப்புடன் பேட்டரி திறன் மற்றும் செயல்பாட்டுத் திறன் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. பிரீமியம் தளத்தில் இருந்தாலும் விலையைப் பொருத்தவரை மத்திய தரத்தில் உள்ளது.
ரெட்மி டர்போ 5 சிறப்புகள்
ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போன் 6.59 அங்குல அமோலிட் திரை கொண்டது.
திரை சுமூகமாக இயங்கும் வகையில் 120Hz திறன் உடையது.
திரை பிரகாசமாக இருக்கும் வகையில் 3,500 nits திறன் வழங்கப்பட்டுள்ளது.
ஹைப்பர் ஓஎஸ் ஆன்டிராய்டு 16 இயங்குதளம் கொண்டது.
மீடியாடெக் டைமன்சிட்டி 8500 அல்ட்ரா சிப்செட் புராசஸர் உடையது.
3D ஐஸ் லூப் கூலிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கேம் விளையாடும்போது ஏற்படும் வெப்பத்தை தடுக்க முடியும்.
7,540mAh பேட்டரி திறன் கொண்டது. வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 100W திறனுடைய சார்ஜர் கொடுக்கப்பட்டுள்ளது.
பின்புறம் 50 மெகா பிக்சல் கேமரா கொண்டுள்ளது.
8GB உள்நினைவகம் (RAM) மற்றும் 256GB நினைவகம் உடைய ஸ்மார்ட்போன் விலை ரூ. 37,999.
12GB உள்நினைவகம் (RAM) மற்றும் 256GB நினைவகம் உடைய ஸ்மார்ட்போன் விலை ரூ. 40,999.
எஸ்பிஐ, ஐசிஐசிஐ, ஆக்சிஸ் வங்கி கடன் அட்டைகளுக்கு ரூ. 2,000 வரை தள்ளுபடி உண்டு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உயா் திறன் தரவு மையங்கள்: இந்தியாவில் ஏா்டிரங்க் நிறுவனம் ரூ.3 லட்சம் கோடி முதலீடு

7,000mAh பேட்டரி உடன் அறிமுகமான ஓப்போ ஏ6சி!

விரைவில் விற்பனைக்கு வரும் ஓப்போ ஸ்மார்ட்போன்! விலை?

ஒரு முறை சார்ஜ் செய்தால் 2 நாள்கள் நீடிக்கும்! பட்ஜெட் விலையில் ரெட்மி ஏ7 ப்ரோ!
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



