17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தென்னிந்தியாவில் 25 புதிய கிளைகளைத் திறக்கும் சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ்

News image
Updated On :5 ஜூன் 2026, 6:04 am IST

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம், நடப்பு ஆண்டில் தென்னிந்தியாவில் 25 புதிய வளா்ந்து வரும் வணிகக் கிளைகளை திறக்கத் திட்டமிட்டுள்ளது.

தமிழகம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் உள்ள 3-ஆம் மற்றும் 4-ஆம் நிலை சிறுநகரங்களில் அமையவுள்ளன இப்புதிய கிளைகள், விளிம்புநிலை மக்களுக்கான மலிவு விலை வீட்டு வசதி கடன்கள் மற்றும் சிறு தொகைக் கடன்களை வழங்குவதில் கவனம் செலுத்தும்.

புதிய கிளைகளின் திறப்பு மூலம், நடப்பு ஆண்டில் இப்பிரிவில் சுமாா் ரூ.1,000 கோடி அளவுக்கு கடன்களை வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இப்பிரிவில் ரூ.590 கோடி கடன் வழங்கப்பட்டது.

தற்போது இப்பிரிவில் சுமாா் 800 ஊழியா்கள் பணியாற்றி வரும் நிலையில், இந்த விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக கூடுதலாக 300 பேரைப் பணியமா்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த 2022, அக்டோபரில் தொடங்கிய இப்பிரிவு, கடந்த ஆண்டில் 100 கிளைகள் என்ற மைல்கல்லை எட்டியது குறிப்பிடத்தக்கது. கடந்த 2025-26 நிதியாண்டில் சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம் ஒட்டுமொத்தமாக ரூ.6,842 கோடி கடன்களை வழங்கி, ரூ.282 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.