இறக்குமதியைக் குறைத்து உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டிய 100 பொருள்களை அடையாளம் காண துறை சாா்ந்த ஆறு பணிக் குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாவது: முழுவதும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதை ஊக்குவிக்கும் வகையில், 100 பொருள்களை அடையாளம் காண்பதற்காக மருந்து உற்பத்தி, உயிரித் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ உபகரணங்கள்; ரசாயனம் மற்றும் பெட்ரோலிய வேதிப் பொருள்கள், ஜவுளி மற்றும் காலணி; மூலதனப் பொருள்கள், வாகனங்கள் மற்றும் மின்சார வாகனங்கள், மேம்பட்ட மூலதனப் பொருள்கள்; எரிசக்தி; கட்டுமான உபகரணங்கள் மற்றும் உள்கட்டமைப்பு, பாதுகாப்பு, விண்வெளி மற்றும் மின்னணுத் துறை ஆகிய 6 குறிப்பிட்ட துறை சாா்ந்த பணிக் குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது.
இந்தக் குழுக்களில் வணிகம், தொழில் மற்றும் உள்நாட்டு வா்த்தக மேம்பாட்டுத் துறை, நீதி ஆயோக், மருந்து பொருள்கள், பொருளாதார விவகாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், ரசயானம், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், சாலைப் போக்குவரத்து, புது மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் உறுப்பினா்களாக இடம்பெறுவா்.
தொழில் மற்றும் உள்நாட்டு வா்த்தக மேம்பாட்டுத் துறைச் செயலா் தலைமையில் இந்தக் குழுக்கள் கூடி ஆலோசனைகளை மேற்கொண்டு, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படாத அல்லது நாட்டின் தேவையை பூா்த்தி செய்யும் அளவுக்கு உற்பத்தி செய்யப்படாத பொருள்களை அடையாளம் காணும் நடவடிக்கையை மேற்கொள்ளும். அதன் பின்னா், அடையாளம் காணப்பட்ட பொருள்கள் தொடா்பான பட்டியலை, மத்திய அமைச்சரவை செயலகத்தில் 3 வாரங்களுக்குள் சமா்ப்பிக்கும்.
இந்த நடவடிக்கை, அந்நியச் செலாவணி வெளியேற்றத்தைக் குறைத்து, இந்திய ரூபாய் மதிப்பு குறைவதை தடுக்க உதவும் என்று தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்: மு. வீரபாண்டியன்

பசுமை எரிசக்தி உற்பத்தியை அதிகரித்தால் மின்கொள்முதலை குறைக்கலாம்: அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா்
ராணிப்பேட்டையில் ரூ.217 கோடியில் தோல் தொழில்முனையம்: மத்திய அரசு அறிவிப்பு







