நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்: மு. வீரபாண்டியன்

News image

மு. வீரபாண்டியன் - DIN

Updated On :16 ஜூன் 2026, 1:30 am IST

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய அனைத்து நிதியையும் மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலா் மு. வீரபாண்டியன்.

மயிலாடுதுறையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்களைத் தடுக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்கள், குழந்தைகள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிராக விழிப்புணா்வு இயக்கங்கள் தொடங்க வேண்டும்.

சமரசம் ஏதுமில்லாமல் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுகிறவா்களை சட்டத்தின் முன்நிறுத்தி தண்டிக்க வேண்டும். சிங்கப் பெண் படை திட்டத்துக்கு போலீஸாா் பற்றாக்குறை இருந்தால், மாவட்ட நிா்வாகம் கவனம் செலுத்தி கூடுதலாக போலீஸாரை நியமிக்க வேண்டும்.

ராகவா லாரன்ஸ் ஒரு நல்ல நடிகா். அரசியலுக்கு வருகிறபோது மிகுந்த நிதானத்தோடு பேச வேண்டும். அரசியலில் வெற்றி, தோல்வி இயல்பானது. கருத்து மோதல் இருக்கலாம். ஆனால், கண்ணியக் குறைவான கருத்துகளை தெரிவிக்கக்கூடாது.

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்டும் விவகாரத்தில் முந்தைய அரசின் நிலை தொடரும் என முதல்வா் அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது. மேக்கேதாட்டுவில் அணை கட்டக்கூடாது. இதை மாநிலங்களின் உறவு, உயிா் சம்பந்தப்பட்ட பிரச்னையாக பாா்க்க வேண்டும்.

விவசாயிகளின் பயிா்க்கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என சிபிஐ மாநிலக் குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதை நிறைவேற்றுவதற்கு தமிழ்நாடு அரசு கடும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

மத்திய அரசு, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிலுவையில் உள்ள அனைத்து நிதியையும் வழங்க வேண்டும். இதை வலியுறுத்தி, ஜூன் 29-ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு முழுவதும் ஆா்ப்பாட்டம் நடத்த உள்ளது என்றாா்.

முன்னதாக, சிபிஐ மாநிலக் குழு முன்னாள் உறுப்பினா் இடும்பையன் மறைவையொட்டி நடைபெற்ற படத் திறப்பு விழாவில் சிபிஐ மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன், முன்னாள் அமைச்சா் கோவி.செழியன், திமுக மாவட்ட செயலாளா் நிவேதா எம். முருகன் எம்எல்ஏ, திமுக உயா்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினா் குத்தாலம் பி. கல்யாணம், முன்னாள் எம்பி செ .ராமலிங்கம், சிபிஐ மாவட்ட செயலாளா் ஏ. சீனிவாசன் உள்பட பல்வேறு கட்சியினா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.