ஓப்போ நிறுவனத்தில் ரெனோ வரிசையில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
ஓப்போ ரெனோ 16, ரெனோ 16 சி ஆகிய இரு ஸ்மார்ட்போன்களும் அதீத பேட்டரி திறன், அமோலிட் திரை, ஸ்நாப்டிராகன் 4 ஆம் தலைமுறை பயன்பாடு போன்றவற்றை கொண்டிருக்கும் என ஓப்போ தெரிவித்துள்ளது. இதனால் பயனர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
சீனாவைச் சேர்ந்த ஓப்போ நிறுவனம் இந்திய பயனர்களைக் கவரும் வகையிலான ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருகிறது. அந்தவகையில் தற்போது ஓப்போ ரெனோ 16, ரெனோ 16 சி என்ற இரு ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் 8GB உள்நினைவகம் (RAM) 256GB நினைவகம் உடைய ஓப்போ ரெனோ தொடக்க விலை ரூ. 61,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
12GB உள்நினைவகம் (RAM) + 256GB நினைவகம் உடைய ஸ்மார்ட்போன் விலை ரூ. 67,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஓப்போ ரெனோ 16 சிறப்பம்சங்கள்
ஓப்போ ரெனோ 16 ஸ்மார்ட்போன் 6.32 அங்குல அமோலிட் திரை கொண்டது.
திரை சுமூகமாக இருக்கும் வகையில் 120Hz திறன் உடையது.
திரை பிரகாசமாக இருக்கும் வகையில் 3,500 nits திறன் கொடுக்கப்பட்டுள்ளது.
ஸ்நாப்டிராகன் 7, 4 ஆம் தலைமுறை புராசஸர் உடையது.
சோனி LYT-600 லென்ஸ் உடைய 50MP முதன்மை கேமரா உள்ளது.
செல்ஃபி பிரியர்களுக்காக 50MP முன்பக்க கேமரா உடையது.
6,700mAh பேட்டரி, வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 80W திறன் கொடுக்கப்பட்டுள்ளது.
ஓப்போ ரெனோ 16சி சிறப்பம்சங்கள்
6.57 அமோலிட் திரை கொண்டது.
திரை சுமூகமாக இருக்கும் வகையில் 120Hz திறன் உடையது.
திரை பிரகாசமாக இருக்கும் வகையில்1,400 திறன் கொடுக்கப்பட்டுள்ளது.
மீடியாடெக் டைமன்சிட்டி 7300 சிப்செட் உடையது.
கேமரா பிரியர்களுக்காக 50MP ஐஓஎஸ் கேமரா உள்ளது. ரெனோ சியில் இல்லாத வகையில் 8MP அல்ட்ரா வைட் கேமரா உள்ளது.
செல்ஃபி பிரியர்களுக்காக 50MP டெலிபோட்டோ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
7,000mAh பேட்டரி திறன், வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 80W திறன் கொடுக்கப்பட்டுள்ளது.
Summary
Oppo Reno 16, Reno 16c smart phone launched Snapdragon 7 Gen 4, 7,000mAh battery
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதிக எதிர்பார்ப்புகளுடன் வெளியாகும் நத்திங் 4பி!

7,540mAh பேட்டரி திறன்! இந்தியாவில் அறிமுகமானது ரெட்மி டர்போ 5!

போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்க தருமபுரி நான்கு சாலையில் தானியங்கி கேமரா!

7,000mAh பேட்டரி உடன் அறிமுகமான ஓப்போ ஏ6சி!
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan





