வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

அதிக எதிர்பார்ப்புகளுடன் வெளியாகும் நத்திங் 4பி!

புதிய வகை ஸ்மார்ட்போன் மாடல்களில் அசத்தலான அம்சங்களுடன் இன்று வெளியாகின்றது நத்திங் 4பி.

News image

நத்திங் 4பி

Updated On :7 ஜூலை 2026, 3:58 pm IST

புதிய வகை ஸ்மார்ட்போன் மாடல்களில் அசத்தலான அம்சங்களுடன் இன்று வெளியாகின்றது நத்திங் 4பி.

சிறப்பம்சங்கள் என்ன?

செயல்திறன்: நத்திங் 4பி ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 இயங்குதளத்துடன் 128 ஜிபி சேமிப்புத் திறனுடன் 8 ஜிபி ரேம் வசதியுடன் வெளியாகின்றது.

திரை: 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 6.77-அங்குல FHD+ AMOLED திரையைக் கொண்டுள்ளது.

வடிவமைப்பு: நத்திங் ஸ்மார்ட்போன்களின் வழக்கமான டிரான்ஸ்பரன்ட் டிசைன் அம்சங்களுடன், பின்புறத்தில் தனி லைட்டிங் வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

கேமரா: பின்பக்க கேமரா OIS உடன் 50 மற்றும் 8 மெகாபிக்ஸல்களும், முன்பக்க கேமரா 16 மெகாபிக்ஸல் உடனும் அமைக்கப்பட்டுள்ளன.

பேட்டரி: 33W அதிவேக சார்ஜிங் திறன் கொண்ட 6,000mAh பேட்டரி அமைந்துள்ளது.

மென்பொருள்: ஆண்ட்ராய்ட் 16 -ன் கீழ் இயங்கும் நத்திங் ஓஎஸ் 4.1 -ன் மென்பொருள் இதில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விலை: நத்திங் 4பி மாடலின் இரு வேரியண்ட்களில் வெளியாகும் என்று கூறப்படும் நிலையில், 8GB + 128GB வேரியண்ட் ₹25,000 முதல் ₹30,000 வரை விற்கப்பட வாய்ப்புள்ளது.

நத்திங் 4பி ஆர்சிபி வேரியண்ட்

நத்திங் 4பி ஆர்சிபி வேரியண்ட்

சாதாரன வேரியண்ட் நீல நிறத்திலும், ஸ்பெஷல் வேரியண்ட்டாக பெங்களூரின் ஆர்சிபி ஐபிஎல் அணியைக் கொண்டாடும் விதமாக சிவப்பு நிறத்திலும் ஒரு மாடல் வெளியாகும் என்றும், பெங்களூரில் உள்ள நத்திங் ஸ்டோர்களில் மட்டுமே அது கிடைக்கும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்று மதியம் 3.30-க்கு சாதாரண மாடலும், 4 மணிக்கு பெங்களுரு ஸ்பெஷல் மாடலும் வெளியாகின்றன.

Summary

Nothing 4b launching with high expectations!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.