லாபம் ஈட்டிய வீவொர்க் இந்தியா!
வீவொர்க் இந்தியா, அதிகரித்த வருவாயின் காரணமாக அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.16.78 கோடியாக இருப்பதாக தெரிவித்தது.


புதுதில்லி: ரியல் எஸ்டேட் நிறுவனமான வீவொர்க் இந்தியா, நிதியாண்டின் 3வது காலாண்டில், அதிகரித்த வருவாயின் காரணமாக அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.16.78 கோடியாக இருப்பதாக தெரிவித்தது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நிறுவனம் ரூ.83.11 கோடி நிகர நஷ்டமடைந்தது.
நிதியாண்டின் 3வது காலாண்டில் மொத்த வருமானம் ரூ.643.81 கோடியாக உயர்ந்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது ரூ.508.37 கோடியாக இருந்தது.
நிதியாண்டின் முதல் 9 மாதங்களில், நிகர லாபம் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.91.45 கோடியிலிருந்து ரூ.9.04 கோடியாக சரிந்தது.
நிதியாண்டின் 3வது காலாண்டில், மொத்த வருமானம் ரூ. 1,775.07 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது ரூ.1,469.13 கோடியாக இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...