/

சரிகம இந்தியா லாபம் 17.8% சரிவு!

சரிகம இந்தியா, தனது ஒருங்கிணைந்த லாபம் 17.8% சரிந்து ரூ.51.24 கோடியாகக் குறைந்துள்ளதாக இன்று தெரிவித்துள்ளது.

News image
சாரேகாமா இந்தியா
Updated On :3 பிப்ரவரி 2026, 2:23 pm

இணையதளச் செய்திப் பிரிவு

புதுதில்லி: சரிகம இந்தியா, 3வது காலாண்டில் தனது ஒருங்கிணைந்த லாபம் 17.8% சரிந்து ரூ.51.24 கோடியாகக் குறைந்துள்ளதாக இன்று தெரிவித்துள்ளது.

ஆர்பிஎஸ்ஜி குழுமத்தைச் சேர்ந்த சரிகம இந்தியா கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் அதன் நிகர லாபம் ரூ.62.34 கோடியாக ஈட்டியிருந்தது. வரிக்கு முந்தைய லாபம் ரூ. 76.50 கோடியாக இருந்ததாகவும், இதுவே கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது ரூ.84.45 கோடியாக இருந்தது.

மதிப்பாய்வுக்குட்பட்ட காலாண்டில் அதன் நேரலை நிகழ்வுகள் மூலமான ஈட்டிய வருவாய் 92.76% சரிந்து ரூ.16.42 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் இது ரூ.226.80 கோடியாக இருந்தது.

நிதியாண்டின் 3வது காலாண்டில் அதன் செயல்பாடுகளின் மூலம் கிடைத்த வருவாய் ரூ.260.38 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.483.43 கோடியுடன் ஒப்பிடும்போது ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் இது 46.13% குறைவாகும்.

இசை பிரிவிலிருந்து கிடைத்த வருவாய் 12.32% அதிகரித்து ரூ.179.31 கோடியாக உள்ள நிலையில், நிதியாண்டின் 3வது காலாண்டில் நிறுவனத்தின் மொத்தச் செலவுகள் ரூ.191.30 கோடியாக இருந்தது.

மற்ற வருமானத்தையும் உள்ளடக்கிய சாரேகமாவின் மொத்த வருமானம், இந்தக் காலாண்டில் ரூ.267.8 கோடியாக இருந்தது. இது 46.34% குறைவாகும்.

சாரேகாமா இந்தியா லிமிடெட் பங்குகள் பிஎஸ்இ-யில் இன்று 0.58% சரிந்து ரூ.327.70ஆக நிலைபெற்றது.

summary

Saregama India reported a 17.8 per cent drop in consolidated profit to Rs 51.24 crore during the December quarter.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.