/

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 122 காசுகள் உயர்ந்து ரூ.90.27ஆக நிறைவு!

இன்றைய வர்த்தகத்தில் இந்திய ரூபாய் ஒரே வர்த்தக அமர்வில் 122 காசுகள் உயர்ந்து, டாலருக்கு நிகராக ரூ.90.27 என்ற அளவில் நிலைபெற்றது.

News image
- PTI Graphics
Updated On :3 பிப்ரவரி 2026, 12:51 pm

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பை: இந்திய-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, இன்றைய வர்த்தகத்தில் இந்திய ரூபாய் ஒரே வர்த்தக அமர்வில் 122 காசுகள் உயர்ந்து, டாலருக்கு நிகராக ரூ.90.27 என்ற அளவில் நிலைபெற்று, சிறந்த செயல்திறன் கொண்ட ஆசிய நாணயமாக உருவெடுத்தது.

வர்த்தக ஒப்பந்தத்தால், ரூபாயின் மதிப்பு இரண்டரை வாரங்களில் இல்லாத உச்சத்தை அடைந்து, சுமார் 1.5% உயர்ந்ததாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

உள்நாட்டு குறியீடுகளும் சுமார் 2.75% உயர்ந்து, சந்தை உணர்வுகளை மேம்படுத்தின. கச்சா எண்ணெய் விலை சரிவு மற்றும் எதிர்பார்க்கப்பட்ட வெளிநாட்டு முதலீடுகளும் முதலீட்டாளர்களின் உணர்வுகளுக்குச் சாதகமாக அமைந்தன.

வாஷிங்டன் இந்தியப் பொருட்களுக்கான பரஸ்பர வரியை 18% குறைக்கும், இது சீனா, வங்கதேசம் மற்றும் வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுக்கான வரியை விட இது குறைவானதாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.