/

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 8 காசுகள் சரிந்து ரூ.90.28 ஆக நிறைவு!

இந்திய ரூபாய், தொடர்ந்து 4-வது நாளாக இன்று பலவீனமாக முடிவடைந்தன.

News image
கோப்புப் படம்
Updated On :5 ஜனவரி 2026, 12:38 pm

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பை: இந்திய ரூபாய், தொடர்ந்து 4-வது நாளாக இன்று பலவீனமாக முடிவடைந்தன. இன்றைய வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 8 காசுகள் சரிந்து ரூ.90.28 ஆக முடிவடைந்தது. வலுவான டாலர் மற்றும் மந்தமான உள்நாட்டு பங்குச் சந்தை நிலவரம் உள்ளிட்டவை ரூபாய் சரிய காரணமாக அமைந்தன.

வெனிசுவேலாவில் அமெரிக்க ராணுவத் தலையீட்டிற்குப் பிறகு மீண்டும் ஏற்பட்ட அரசியல் நிச்சயமற்ற தன்மைகளால் உலகளவில் டாலருக்கான தேவையை அதிகரித்தது. இருப்பினும் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால், இந்திய ரூபாயை அது குறைந்த அளவில் ஆதரித்ததாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், ரூபாய் மதிப்பு ரூ.90.21 என்ற அளவில் வர்த்தகம் தொடங்கி, வர்த்தக நேரத்தின் போது ரூ.90.50 என்ற நாளின் குறைந்தபட்ச நிலையை எட்டியது. பிறகு, அதன் முந்தைய நாளின் இறுதி விலையை விட 8 காசுகள் பலவீனமடைந்து, டாலருக்கு நிகரான ரூ.90.28 என்ற அளவில் முடிவடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.