டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 14 காசுகள் சரிந்து ரூ.90.70 ஆக நிறைவு!

அந்நிய செலாவணி வர்த்தத்தில் இன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 14 காசுகள் சரிந்து ரூ.90.70 ஆக நிலைபெற்றது.

News image
கோப்புப் படம்
Updated On :11 பிப்ரவரி 2026, 12:44 pm

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பை: இறக்குமதியாளர்களுக்கு டாலர் தேவை அதிகரிப்பு மற்றும் அரசியல் பதற்றங்கள் உள்ளிட்ட காரணத்தால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 14 காசுகள் சரிந்து ரூ.90.70 ஆக நிலைபெற்றது.

புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் உயர்ந்து வந்த கச்சா எண்ணெய் விலை மத்தியில் ரூபாய் சற்று எதிர்மறையான சார்புடன் வர்த்தகமானதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.90.56 ஆக தொடங்கி, இன்ட்ராடே வர்த்தகத்தில் ரூ.90.75 என்ற குறைந்தபட்ச அளவிலும் பிறகு அதிகபட்சமாக ரூ.90.46 என்ற நிலைக்கு சென்று இறுதியில் ரூ.90.70 ஆக நிலைபெற்று அதன் முந்தைய முடிவை விட 14 காசுகள் சரிவைப் பதிவு செய்தது.

நேற்று (செவ்வாய்க்கிழமை) ரூபாய் மதிப்பு நேர்மறையான குறிப்பில் நிலைபெற்று, டாலருக்கு நிகராக 10 காசுகள் உயர்ந்து ரூ.90.56 ஆக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.