டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் சரிந்து ரூ.90.64 ஆக நிறைவு!

இந்திய ரூபாய் மதிப்பு 3 காசுகள் குறைந்து ரூ.90.64 ஆக நிலைபெற்றது.

News image
- PTI Graphics
Updated On :13 பிப்ரவரி 2026, 1:16 pm

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பை: இன்றைய அந்நிய செலாவணி வர்த்தகத்தில், இந்திய ரூபாய் மதிப்பு 3 காசுகள் குறைந்து ரூ.90.64 ஆக நிலைபெற்றது.

வெளிநாட்டு சந்தையில் அமெரிக்க நாணயத்தின் வலிமை மற்றும் உள்நாட்டு பங்குச் சந்தையில் ஏற்பட்ட எதிர்மறையான போக்கு ஆகியவற்றால், அந்நிய செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 3 காசுகள் குறைந்து ரூ.90.64 ஆக நிலைபெற்றது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.90.69 ஆக தொடங்கி, பிறகு இன்ட்ராடே வர்த்தகத்தில், அதிகபட்சமாக ரூ.90.60 சென்ற பிறகு, குறைந்தபட்சமான ரூ.90.79 ஐ தொட்டது. வர்த்தக முடிவில், அதன் முந்தைய நாள் முடிவை விட 3 காசுகள் குறைந்து ரூ.90.64 ஆக முடிவடைந்தது.

நேற்றை வர்த்தகத்தில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 17 காசுகள் உயர்ந்து ரூ.90.61 ஆக நிலைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.