/

தங்கம் விலை அதிரடி உயர்வு! மீண்டும் ஒரு லட்சத்தைக் கடந்தது!

தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றி...

News image
தங்கம் விலை - ANI
Updated On :2 ஜனவரி 2026, 4:21 am

இணையதளச் செய்திப் பிரிவு

தங்கம் விலை உயர்வு: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 1,120 அதிகரித்துள்ளது.

தங்கம், வெள்ளியின் விலை வரலாறு காணாத அளவில் அதிகரித்து வரும் நிலையில், கடந்த வாரம் ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாயைக் கடந்தது.

பின்னர், தங்கத்தின் விலை படிப்படியாக குறைந்த நிலையில், புதன்கிழமை ஒரு சவரன் ரூ. 99,840-க்கும், புத்தாண்டு முதல் நாளான நேற்று ரூ. 99,520-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், சென்னையில் வெள்ளிக்கிழமை காலை 22 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 1,120 உயர்ந்துள்ளது. தற்போது ஒரு கிராம் ரூ. 12,580-க்கும், ஒரு சவரன் ரூ. 1,00,640-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதனிடையே வெள்ளியின் விலை இன்று காலை கிலோவுக்கு ரூ. 4,000 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 260-க்கும், ஒரு கிலோ ரூ. 2,60,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

summary

Gold price surges dramatically: It has crossed the one lakh rupees again!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.