/

ரெட்மி நோட் 15 ப்ரோ இந்தியாவில் இன்று அறிமுகம்!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரெட்மி நோட் 15 ப்ரோ இந்திய சந்தைகளில் இன்று அறிமுகமானது குறித்து..

News image
ரெட்மி நோட் 15 ப்ரோ - படம் / நன்றி - ரெட்மி
Updated On :4 பிப்ரவரி 2026, 1:01 pm

இணையதளச் செய்திப் பிரிவு

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரெட்மி நோட் 15 ப்ரோ இந்திய சந்தைகளில் இன்று (பிப். 4) அறிமுகமாகியுள்ளது.

அதிக திறன் வாய்ந்த பேட்டரி, வேகமாக சார்ஜ் ஆகும் திறன் ஆகிய இரண்டும் இதன் முக்கிய சிறப்பம்சங்களாகப் பார்க்கப்படுகின்றன.

ஷாவ்மி நிறுவனத்தின் கிளை நிறுவன தயாரிப்பான ரெட்மி நோட் 15 ப்ரோ உடன், ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ்ஸும் அறிமுகமாகியுள்ளது.

8GB உள்நினைவகம் (RAM) 128GB நினைவகம் (ROM) கொண்ட ரெட்மி நோட் 15 ப்ரோ விலை ரூ. 29,999.

8GB உள்நினைவகம் 256GB நினைவகம் கொண்ட ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் விலை ரூ. 37,999.

12GB உள்நினைவகம் 256GB நினைவகம் கொண்ட ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் விலை ரூ. 39,999.

12GB உள்நினைவகம் 512GB நினைவகம் கொண்ட ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் விலை ரூ. 43,999.

சிறப்பம்சங்கள்

6.83 அங்குல ஓஎல்இடி திரை கொண்டது.

திரை சுமுகமாக இயங்கும் வகையில்120Hz திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

திரை பிரகாசமாக இருப்பதற்காக 3,200 nits திறன் வழங்கப்பட்டுள்ளது.

தூசி, நீர்ப்புகாத் தன்மைக்காக IP66, IP68 திறனுடன் தயாரிக்கப்பட்டுள்ளன.

மீடியாடெக் டைமன்சிட்டி 7400 புராசஸர் கொண்டது.

ஸ்நாப்டிராகன் 7எஸ் 4ஆம் தலைமுறை சிப்செட் உடையது.

பின்புறம் 200MP முதன்மை கேமரா உடையது. 8MP அல்ட்ரா வைட் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்கம் 32MP கேமரா உள்ளது.

6,500mAh பேட்டரி திறன் உடையது. வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 45W திறன் வழங்கப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் போனுக்கு 6,580mAh பேட்டரி திறனும் 100W வேகமாக சார்ஜ் ஆகும் திறனும் கொடுக்கப்பட்டுள்ளது.

கார்பன் கருப்பு, காஃபி, நீலம் ஆகிய நிறங்களில் தயாரிக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.