/

தங்கம் விலை மீண்டும் உயர்வு: சவரனுக்கு ரூ.1,280 அதிகரிப்பு!

சென்னையில் தங்கம் விலை மீண்டும் உயர்வு பற்றி..

News image
தங்கம் விலை உயர்வு
Updated On :14 பிப்ரவரி 2026, 4:36 am

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ரூ.1,280 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய காலமாகவே தங்கம் மற்றும் வெள்ளியின் விலை ஏற்ற இறக்கமாகவே அதிகரித்தும் குறைந்தும் வருகிறது.

அதன்படி, வாரத்தின் கடைசி நாளான இன்று ஒரு கிராம் ரூ. 160 உயர்ந்து ரூ. 14,560-க்கும், ஒரு சவரன் ரூ. 1,280 உயர்ந்து ரூ. 1,16,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று சவரனுக்கு ரூ. 1,600 குறைந்திருந்த நிலையில் இன்று ரூ. 1,280 அதிகரித்துள்ளது.

ஆனால், வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ. 280 -ஆக தொடர்ந்து விற்பனையாகிறது. ஒரு கிலோ ரூ. 2,80,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

summary

சென்னையில் தங்க நகைகளின் விலை ரூ. 1,280 உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.