ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

திரை இல்லாமல் வெளியாகும் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்!

தொடுதிரை இல்லாத ஸ்மார்ட் வாட்ச் தயாரிக்கும் பணிகளில் ஆப்பிள் நிறுவனம் ஈடுபட்டுள்ளது குறித்து...

Apple is working on developing a smartwatch

தொடுதிரை இல்லாத ஸ்மார்ட் - படம் / நன்றி - ஆப்பிள்

Published On :10 ஆகஸ்ட் 2026, 3:50 pm IST

ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச் அடுத்தடுத்த ஆண்டுகளில் புதிய பரிணாமத்தை எட்டவுள்ளது.

மற்ற நிறுவனங்களின் ஸ்மார்ட் வாட்ச் தயாரிப்பில் இருந்து மாறுபட்டு இருக்கும் வகையிலும் சந்தை மதிப்பை உயர்த்தும் வகையிலும் எதிர்காலப் பயன்பாட்டு விருப்பம் குறித்த ஆய்வில் ஆப்பிள் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

எதிர்காலத்தில் ஸ்மார்ட் வாட்ச் பயன்பாடு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த புதிய யோசனைகளை ஆப்பிள் நிறுவனம் வரவேற்று வருகிறது. இந்த யோசனைகளில் கவனம் பெற்றதாக உள்ளது, திரை இல்லாத ஸ்மார்ட் வாட்ச். இந்த ஸ்மார்ட் வாட்ச்சின் இறுதி வடிவமும் தயாராகிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரையை தவிர்ப்பது ஏன்?

ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச்கள் பலவகையில் மாற்றம் அடைந்துள்ளன. ஆனால், அனைத்து வடிவங்களிலும் அடிப்படையை ஆப்பிள் நிறுவனம் மாற்றவில்லை. அதாவது சிறிய திரை, கைகளில் சிறிய பட்டை, செயலிகள், நோடிஃபிகேஷன், ஆரோக்கிய நலன் கண்காணிப்பு போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.

எனினும் தற்போது தொடுதிரை / திரை இல்லாமல் ஸ்மார்ட் வாட்ச்களை தயாரிப்பதற்கான காரணம், உடல்நலன் மற்றும் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது.

அதாவது நாள் முழுக்க திரையைப் பார்த்துக்கொண்டிருப்பவர்கள், உடல் நலனில் கவனம் செலுத்தும்போது கூட ஸ்மார்ட் வாட்ச் அணிந்துகொண்டு நோடிஃபிகேஷன்களை பார்ப்பது, ஆரோக்கியத்தின் அளவீடைப் பார்ப்பது என திரைகளையே பார்க்க வேண்டியுள்ளது.

இதனைத் தவிர்த்து கவனச் சிதறல் இல்லாமல், உடல் ஆரோக்கியத்தில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புவோருக்கு திரை இல்லாத இந்த ஸ்மார்ட் வாட்ச் பயனுள்ளதாக இருக்கும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது.

Summary

Apple is working on developing a smartwatch without a touchscreen

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.