ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தியேட்டர் சவுண்ட் அனுபவத்தைக் கொடுக்கும் ரியல்மி ஸ்மார்ட் டிவி!

ரியல்மி நிறுவனம் டெக்லைஃப் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ள 55 அங்குல ஸ்மார்ட் டிவி குறித்து...

 Realme Smart TV

ரியல்மி டெக்லைஃப் ஸ்மார்ட் டிவி - படம் / நன்றி - ரியல்மி

Published On :28 ஜூலை 2026, 6:53 pm IST

ரியல்மி நிறுவனம் டெக்லைஃப் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ள 55 அங்குல ஸ்மார்ட் டிவி இளம் தலைமுறையினரை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

தியேட்டர் ஒலி அனுபவத்தைக் கொடுக்கும் வகையில் 7 வகையான சவுண்ட் மோடுகள் கொடுக்கப்பட்டுள்ளதால், நுணுக்கமான மற்றும் மிகச்சிறந்த அனுபவத்தைக் கொடுக்கக் கூடியவகையில் இந்த ஸ்மார்ட் டிவி வடிவமைக்கப்பட்டுள்ளது.

சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ரியல்மி நிறுவனம் ஸ்மார்ட்போன் தயாரிப்புடன் வீட்டு உபயோக மின்னணு பொருள்கள் தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறது.

அந்தவகையில் ரியல்மி டெக்லைஃப் என்ற பெயரில் 55 அங்குல (140 செ.மீ.) ஸ்மார்ட் டிவியை வடிவமைத்துள்ளது. கியூ.எல்.இ.டி. அல்ட்ரா எச்.டி. திரையுடன் கூகுள் டிவி இயங்குதளத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஏஐ சவுண்ட் ஆப்ஷன்கள், டால்பி அட்மோஸ் உடன் திரையரங்க அனுபவத்தைக் கொடுக்கும் வகையில் 7 சவுண்ட் மோடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால், ஒலியின் தரத்தில் சமரசமின்றி பொழுதுபோக்கு அம்சத்தை முழுமையாக அனுபவிக்கலாம்.

2 ஜிபி உள்நினைவகம், 32 ஜிபி நினைவகம் உடைய இந்த ஸ்மார்ட் டிவி, கண் திறனை பாதுகாக்கும் வகையில் ஐ கேர் மோட் உடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 28,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Summary

Realme Smart TV delivers a theatre-like sound experience

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.