மனசாட்சியே இல்லாத நிறுவனம் என்.எல்.சி.! செளமியா அன்புமணி காட்டம்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் என்.எல்.சி. தொடர்பாக செளமியா அன்புமணி பேசியது...
செளமியா அன்புமணி - TN Assembly
தமிழ்நாட்டில் மனசாட்சியே இல்லாத நிறுவனம் என்றால் அது என்.எல்.சி.தான் என்று பாமக எம்.எல்.ஏ. செளமியா அன்புமணி வியாழக்கிழமை சட்டப்பேரவையில் பேசினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று கூட்டுறவு - உணவுத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
அப்போது, என்எல்சி இந்தியா தொடர்பாக சட்டப்பேரவை உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பதிலளித்தார்.
என்எல்சி நிறுவனமிடம் இருந்து பெறப்பட்ட பதிலின் அடிப்படையில் அவர் பேசுகையில், ”என்எல்சி இந்தியா நிறுவனம் தனது சுரங்கம் அமைந்துள்ள சுற்றுப்பகுதி கிராமத்துக்கு மிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. கிராமவாசிகள் நிலத்தில் கால்வாய், மண்சரிவு போன்ற சம்பவங்கள் சமீபத்தில் நடைபெறவில்லை. 2015 கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு பிறகு நிவாரணப் பணிகள், இழப்பீடுகள் வழங்கப்பட்டன. அதன்பிறகு எந்த சம்பவமும் நடைபெறவில்லை” எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பாமக எம்.எல்.ஏ. செளமியா அன்புமணி பேசியதாவது:
”என்எல்சி குறித்து அமைச்சர் பதிலளித்தார். சிஎஸ்ஆருக்காக குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், அவர்கள் சிஎஸ்ஆர் தொகையை வெளியில் கொடுப்பதே கிடையாது.
மனசாட்சியே இல்லாத நிறுவனம் என்.எல்.சி.தான். தமிழ்நாட்டில் மனசாட்சியே இல்லாமல் ஒரே இரவில் விவசாயிகளை தூக்கி வெளியே போட்டுவிட்டு, தண்ணீர் வளத்தை கெடுத்துவிட்டார்கள்.
அங்கு பணிபுரிய தேர்வு வைத்து வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள். மண்ணின் மைந்தர்களான அவர்களுக்கு வேலையும், பயிற்சியும் அளிக்க வேண்டும். தேர்வு வைத்து வெளியிலிருந்து ஆட்களை எடுக்கிறார்கள். 12 ஆம் வகுப்பு தகுதி அடிப்படையில் வேலை கொடுப்பதில்லை.
என்எல்சி கொடுக்கும் அனைத்து தகவலும் உண்மைக்கு புறம்பாகதான் இருக்கும். அவர்கள் கொடுக்கும் சிஎஸ்ஆர் கணக்குகள் எல்லாம் வளாகத்துக்குள்ளேயே சாலை போட்டோம், பாலம் கட்டினோம் என்றுதான் இருக்கும். மக்களுக்காக எதுவும் செய்ததில்லை” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் கீர்த்தனா, “என்எல்சி தொடர்பாக பல பிரச்னைகள் எழுப்பப்படுகிறது. இனிமேல் விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள விட மாட்டோம். என்எல்சி தவறு செய்தால் நடவடிக்கை எடுப்போம்” என்றார்.
Summary
NLC is a company devoid of conscience! Sowmya Anbumani lashes out!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





