அரசுக்குச் சொந்தமான, பொதுத்துறை வங்கியான பஞ்சாப் & சிந்து வங்கியின் பங்குகள், இன்றைய வர்த்தகத்தில், நிஃப்டி-யில் 2.72% வரை சரிந்து, பங்கு ஒன்றுக்கு ரூ. 25 என்ற நிலையை எட்டியது.
வங்கியின் வாராக் கடன் குறைவாக இருந்ததும், ஒரு முக்கியக் காரணமாக அமைந்ததால், 2026 நிதியாண்டின் 4வது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் 35% உயர்ந்து ரூ.422 கோடியாக இருப்பதாக அறிவித்தது பஞ்சாப் & சிந்து வங்கி. இதுவே, கடந்த ஆண்டு, வங்கி ரூ.313 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது.
வங்கியின் மொத்த வருமானம், கடந்த ஆண்டு ரூ. 3,836 கோடியாக இருந்த நிலையில், தற்போது ரூ. 3,457 கோடியாக குறைந்துள்ளதாகப் பஞ்சாப் & சிந்து வங்கி தெரிவித்துள்ளது. அதே வேளையில், அதன் வட்டி வருமானமும் ரூ. 3,159 கோடியிலிருந்து ரூ. 3,030 கோடியாக குறைந்துள்ளது.
சொத்தை பொறுத்தவரை, வங்கியின் மொத்த வாராக் கடன், மார்ச் 2025 இறுதியில் 3.38% ஆக இருந்த நிலையில், தற்போது மொத்தக் கடன் வழங்கல்களில் இது 2.4% ஆக குறைந்துள்ளது. வங்கியின், நிகர வாராக் கடன் முன்னதாக 0.96% ஆக இருந்த நிலையில், தற்போது 0.79% ஆக குறைந்துள்ளது.
வங்கியின் மூலதன விகிதம், 2025 நிதியாண்டின் இறுதியில் இருந்த 17.41 சதவீதத்திலிருந்து, 17.42 சதவீதமாக சற்று மேம்பட்டுள்ளது.
2025-26 முழு நிதியாண்டுக்கான வங்கியின் லாபம், கடந்த ஆண்டு ரூ. 1,016 கோடியாக இருந்த நிலையில், தற்போது 30% உயர்ந்து ரூ. 1,322 கோடியாக உள்ளது. வங்கியின் மொத்த வருமானம், கடந்த ஆண்டு ரூ. 13,049 கோடியாக இருந்த நிலையில், தற்போது ரூ. 13,759 கோடியாக உயர்ந்துள்ளது.
2025-26 நிதியாண்டிற்காக, தலா ரூ. 10 முகமதிப்பு கொண்ட ஒவ்வொரு பங்குக்கும் 39 காசுகள் ஈவுத்தொகையாக வழங்க வங்கியின் இயக்குநர்கள் குழு பரிந்துரைத்துள்ளது. அதே வேளையில், பங்குதாரர்களின் ஒப்புதலும் பெறவேண்டும் என்றது.
Summary
Shares of Punjab & Sind Bank, slipped as much as 2.72% to rupees 25 a piece on the NSE.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

4-ஆம் காலாண்டு லாபம் இந்தியன் வங்கி 5% வளா்ச்சி

4-ஆம் காலாண்டு லாபம்... சிட்டி யூனியன் வங்கி 25% வளா்ச்சி

ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் 4வது காலாண்டு லாபம் 5% உயர்வு!

யூகோ வங்கியின் லாபம் 23% உயர்வு!
விடியோக்கள்
"நன்றிகெட்ட Congress கட்சி”: விளாசிய DMK ஆர்.எஸ்.பாரதி
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிப்பது குறித்து மாணிக்கம் தாகூர்! | TVK | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு



