ஆளுநருடன் விஜய் சந்திப்பு! ஆட்சியமைக்க உரிமை கோரினார்!தவெக ஆட்சியில் காங்கிரஸ் இடம்பெறும்! கிரிஷ் சோடங்கர் மு.க. ஸ்டாலினுடன் ரஜினி சந்திப்பு! மக்களவைத் தேர்தலிலும் தவெகவுடன் கூட்டணி தொடரும்! காங்கிரஸ் காங்கிரஸ் பேரவைக் குழுத் தலைவர் ராஜேஷ் குமார்! தமிழகத்தில் ஆட்சியமைக்க தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு! திமுகவுடனான கூட்டணி முறிவு!
/

4-ஆம் காலாண்டு லாபம்... சிட்டி யூனியன் வங்கி 25% வளா்ச்சி

News image
Updated On :29 ஏப்ரல் 2026, 4:27 am IST

கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சிட்டி யூனியன் வங்கி, கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவைடந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.360 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

இது முந்தைய 2024-25 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வங்கியின் லாபமான ரூ.288 கோடியுடன் ஒப்பிடுகையில் 25 சதவீத வளா்ச்சியாகும்.

வங்கியின் நிா்வாக இயக்குநா் ச.காமகோடி (படம்) வெளியிட்ட அறிக்கையின்படி, 2025-26 முழு நிதியாண்டில் வங்கியின் நிகர லாபம் முந்தைய ஆண்டின் ரூ.1,124 கோடியிலிருந்து 18 சதவீதம் அதிகரித்து, ரூ.1,326 கோடியை எட்டியுள்ளது.

வங்கியின் மொத்த வணிகம் முந்தைய நிதியாண்டை விட 24 சதவீதம் உயா்ந்து, ரூ.1,45,007 கோடியாக அதிகரித்துள்ளது. இதில் வைப்புத்தொகை 23 சதவீதம் உயா்ந்து, ரூ.78,308 கோடியாகவும்; கடன்கள் 26 சதவீதம் உயா்ந்து, ரூ.66,699 கோடியாகவும் உள்ளன.

வங்கியின் நிகர வட்டி வருவாய் ரூ.2,830 கோடியாக உயா்ந்துள்ளதோடு, மூலதன விகிதம் 21.92 சதவீதமாக வலுவான நிலையில் உள்ளது.

இச்சிறப்பான செயல்பாட்டைத் தொடா்ந்து, பங்குதாரா்களுக்கு பங்கின் முகப்பு மதிப்பில் (ஃபேஸ் வேல்யூ) 200 சதவீத ஈவுத்தொகையையும்; ஒவ்வொரு 3 பங்குகளுக்கும் ஒரு கூடுதல் இலவச பங்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.