அதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?
/

சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமில்லை! ஆட்டோ, வங்கிப் பங்குகள் உயர்வு!

இன்றைய பங்குச்சந்தை வர்த்தகம் பற்றி...

News image

கோப்புப் படம் - IANS

Updated On :20 ஏப்ரல் 2026, 12:54 pm

வாரத்தின் முதல் நாளான இன்று(ஏப். 20, திங்கள்கிழமை) பங்குச்சந்தைகள் சற்றே உயர்வுடன் நிறைவு பெற்றுள்ளன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 78,632.90 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலையில் சென்செக்ஸ் 400 புள்ளிகள் வரை உயர்ந்தது. அதன்பின்னர் சரிந்த நிலையில் வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 26.76 புள்ளிகள் உயர்ந்து 78,520.30 புள்ளிகளில் நிலை பெற்றது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 11.30 புள்ளிகள் உயர்ந்து 24,364.85 புள்ளிகளில் நிறைவு பெற்றது.

சென்செக்ஸ் 30 பங்குகளில் எஸ்பிஐ, ட்ரெண்ட், என்டிபிசி, பஜாஜ் பைனான்ஸ், இண்டிகோ, ஐசிஐசிஐ வங்கி, எம்&எம், எட்டர்னல், பவர் கிரிட், அல்ட்ரா சிமெண்ட், ஏசியன் பெயிண்ட்ஸ், அதானி போர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் உயர்ந்தும் மற்ற நிறுவனங்கள் சரிந்தும் வரத்தகமாகின.

துறைவாரியாகப் பார்க்கும்போது, நிஃப்டி ஆட்டோ, வங்கிகள், நிதி சேவைகள், பொதுத்துறை வங்கிகள், மீடியா, எண்ணெய்& எரிவாயு துறைகள் சிறப்பாகச் செயல்பட்ட நிலையில் ரியல் எஸ்டேட், ஐடி, பார்மா, உலோகப் பங்குகள் சரிந்தன.

கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 94.68 டாலராக உள்ளது.

வர்த்தகநேர முடிவில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.2% சரிந்து 93.12 ஆக உள்ளது.

Summary

Sensex, Nifty Flat Amid Crude Oil Rebound

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.