வாரத்தின் முதல் நாளான இன்று(ஏப். 20, திங்கள்கிழமை) பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடங்கி வர்த்தகமாகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 78,632.90என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 410.13 உயர்ந்து 78,903.55 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 109.05 புள்ளிகள் உயர்ந்து 24,462.60 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
நிஃப்டி மிட்கேப், ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 0.27 சதவீதம், 0.09 சதவீதம் உயர்ந்து வர்த்தகமாகிறது.
அதேபோல சென்செக்ஸ் 30 பங்குகளில் எஸ்பிஐ, ட்ரெண்ட், ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், அதானி போர்ட்ஸ், சன் பார்மா உள்ளிட்ட நிறுவனங்கள் உயர்ந்தும் ஹெச்சிஎல் டெக், டிசிஎஸ், இன்போசிஸ், டெக் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் சரிந்தும் வரத்தகமாகின்றன.
துறைவாரியாகப் பார்க்கும்போது, நிஃப்டி ரியல் எஸ்டேட், பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் சிறப்பாகச் செயல்பட்ட நிலையில் எண்ணெய் & எரிவாயு, உலோகப் பங்குகள் சரிந்து வருகின்றன.
கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 95.54 டாலராக உள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 92.82 ஆக உள்ளது.
Summary
Stock Market: Sensex rises 400 points, Nifty above 24,400
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1,500, நிப்டி 440 புள்ளிகள் உயர்வு!

3-ம் நாளாக பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் உயர்வு!!

ஏற்றத்தில் பங்குச்சந்தை! ஆட்டோ, உலோகப் பங்குகள் உயர்வு! ஐடி பங்குகள் சரிவு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


