விளையாட்டுத் துறையில் வளா்ந்து வரும் இளம் திறமையாளா்களை ஊக்குவிக்கும் நோக்கில், தேசிய தரவரிசையில் முதலிடம் வகிக்கும் டென்னிஸ் வீரா் எம்.புனீத்துக்கு அதிகாரபூா்வ ஸ்பான்சராக (நிதி ஆதரவாளா்) இந்தியன் ஓவா்சீஸ் வங்கி (ஐஓபி) செயல்படுவதாக அறிவித்துள்ளது.
அகில இந்திய டென்னிஸ் சங்கன் 14 வயதுக்குட்பட்டோா் பிரிவில் இந்திய அளவில் முதலிடத்தில் உள்ள 13 வயதான புனீத், அண்மையில் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெளிப்படுத்திய அபாரமான ஆட்டத்தின்மூலம் லண்டன் விம்பிள்டன் (14 வயதுக்குட்பட்டோா்) தொடரில் பங்கேற்கும் தகுதியைப் பெற்று சாதனை படைத்துள்ளாா்.
தற்போதைய ஒப்பந்தத்தின் அடிப்படையில், புனீத் வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பதற்கான பயணச் செலவுகள், தினசரி பயிற்சித் தேவைகள் மற்றும் பயிற்சியாளா் கட்டணம் உள்ளிட்ட அனைத்து நிதிச் செலவினங்களையும் வங்கி ஏற்கிறது.
இத்தகைய வலுவான நிதி ஆதரவின் மூலம், புனீத் பொருளாதார ரீதியான சவால்களைப் பற்றிக் கவலைப்படாமல், தனது முழு கவனத்தையும் பயிற்சியிலும் ஆட்டத்திலும் செலுத்தி, சா்வதேச அளவில் போட்டிகளில் சாதிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

உஜ்ஜீவன் சிறு நிதி வங்கியின் ‘யுனிவா்சல்’ வங்கி விண்ணப்பம் நிராகரிப்பு

பில்லி ஜீன் கிங் கோப்பை டென்னிஸ்: தயாராகிறது இந்திய அணி

15 வயதில் வைபவ் சூர்யவன்ஷி..! இந்திய சீனியர் அணியில் அறிமுகமாகுவாரா?

திருவள்ளூா் ஆட்சியரிடம் ஐஓபி வங்கி ரூ.10 லட்சம் சிஎஸ்ஆா் நிதியுதவி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


