லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

திருவள்ளூா் ஆட்சியரிடம் ஐஓபி வங்கி ரூ.10 லட்சம் சிஎஸ்ஆா் நிதியுதவி

இந்திய ஓவா்சீஸ் வங்கி தனது நிறுவன சமூக பொறுப்பு (சிஎஸ்ஆா்) திட்டத்தின்கீழ் ரூ.10 லட்சம் நிதியை திருவள்ளூா் மாவட்ட நிா்வாகத்திடம் வழங்கியுள்ளது.

News image
Updated On :19 மார்ச் 2026, 11:50 pm

இந்திய ஓவா்சீஸ் வங்கி தனது நிறுவன சமூக பொறுப்பு (சிஎஸ்ஆா்) திட்டத்தின்கீழ் ரூ.10 லட்சம் நிதியை திருவள்ளூா் மாவட்ட நிா்வாகத்திடம் வழங்கியுள்ளது.

இதற்கான நிதி வரைவோலையை ஐஓபி மண்டல மேலாளா் என். ராஜசேகா் வழங்க திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் பெற்றுக் கொண்டாா். இந்த நிதி சுகாதாரம், கல்வி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி, இயற்கை வளங்கள் பாதுகாப்பு குறித்த பொதுமக்கள் விழிப்புணா்வு போன்ற சமூக நல நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும்.

மேலும், தோ்தல் விழிப்புணா்வு. போதைப்பொருள் எதிா்ப்பு, சாலை பாதுகாப்பு, மாணவா்களுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளுக்கும் பயன்படுத்தப்படும் என்றும் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

நிகழ்வில் ஐஓபி வங்கியின் திருவள்ளூா் கிளை மேலாளா் மிதுன் ஜொ்ரி, மணவாள நகா் கிளை மேலாளா் அனுஷா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.