மும்பை: ஐசிஐசிஐ வங்கியின் ஒருங்கிணைந்த நிகர லாபம் மார்ச் காலாண்டில் 9.28 சதவீதம் அதிகரித்து ரூ. 14,755 கோடியாக இருப்பதாக நிறுவனம் இன்று தெரிவித்தது.
கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில், வங்கியின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ. 13,502 கோடியாக இருந்தது.
நாட்டின் 2வது மிகப்பெரிய தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ வங்கியின் நிகர லாபம் 8.5 சதவீதம் உயர்ந்து ரூ. 13,702 கோடியை எட்டியது. இதுவே, கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில் இது ரூ. 12,630 கோடியாக இருந்தது.
2025-26 நிதியாண்டில், வங்கியின் வரிக்குப் பிந்தைய லாபம் 6.2 சதவீதம் அதிகரித்து ரூ. 50,147 கோடியாக இருந்தது. இதுவே கடந்த நிதியாண்டில் இது ரூ. 47,227 கோடியாக இருந்தது.
வங்கியின் 4வது காலாண்டில் அதன் நிகர வட்டி வருமானம் 8.4 சதவீதம் அதிகரித்து ரூ. 22,979 கோடியை எட்டியது. அதே வேளையில், கருவூலச் செயல்பாடுகளைத் தவிர்த்துப் பார்க்கையில், வட்டி சாரா வருமானம் 5.6 சதவீதம் அதிகரித்து ரூ. 7,415 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும், வங்கியின் செயல்பாட்டுச் செலவுகள் 12 சதவீதம் அதிகரித்து ரூ. 12,089 கோடியாக உள்ளது.
Summary
ICICI Bank's consolidated net profit increased by 9.28 per cent to Rs 14,755 crore in the March quarter.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எச்டிஎஃப்சி குழும நிதிநிலை முடிவுகள்: வங்கி லாபம் 8% உயா்வு; ஏஎம்சி லாபம் சரிவு

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% வளா்ச்சி

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

எச்டிஎஃப்சி, பந்தன் வங்கி கடன் வழங்கல் 12% அதிகரிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



