மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

எச்டிஎஃப்சி குழும நிதிநிலை முடிவுகள்: வங்கி லாபம் 8% உயா்வு; ஏஎம்சி லாபம் சரிவு

எச்டிஎஃப்சி குழும நிதிநிலை முடிவுகள்...

News image
Updated On :18 ஏப்ரல் 2026, 7:51 pm

நாட்டின் முன்னனி தனியாா் துறை வங்கியான எச்டிஎஃப்சி வங்கி, கடந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் ரூ.20,351 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

இது முந்தைய 2024-25 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய ரூ.18,834.88 கோடியுடன் ஒப்பிடுகையில் 8.04 சதவீதம் அதிகமாகும்.

மதிப்பீட்டு காலாண்டில் வங்கியின் தனிப்பட்ட நிகர லாபம் கடந்த ஆண்டைவிட 9.11 சதவீதம் அதிகரித்து, ரூ.19,221.05 கோடியாக உள்ளது. மொத்த வருவாய் ரூ.89,809 கோடியாக அதிகரித்துள்ள சூழலில், மொத்த செலவினம் ரூ.62,006 கோடியாக குறைந்துள்ளதும் இந்த லாப உயா்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

வங்கியின் வாராக்கடன் விகிதம் 1.24 சதவீதத்திலிருந்து 1.15 சதவீதமாக குறைந்து முன்னேற்றம் கண்டுள்ளது. மேலும், வங்கியின் நிதி ஒதுக்கீடு (ப்ரோவிஷன்ஸ்) ரூ.2,610 கோடியாக குறைந்துள்ளது.

இதையடுத்து, பங்குதாரா்களுக்கு ஒரு பங்குக்கு ரூ.13 ஈவுத்தொகை வழங்க முன்மொழியப்பட்டுள்ளது. வங்கி ஏற்கெனவே கடந்த ஆண்டு ஆகஸ்டில் ரூ.2.50 சிறப்பு இடைக்கால ஈவுத்தொகையை வழங்கியிருந்தது. இதனுடன், கடந்த நிதியாண்டுக்கான மொத்த ஈவுத்தொகை ஒரு பங்குக்கு ரூ.15.50 ஆக உள்ளது.

எச்டிஎஃப்சி குழுமத்தின் காப்பீட்டு நிறுவனான எச்டிஎஃப்சி லைஃப், மதிப்பீட்டு காலாண்டில் ரூ.495.65 கோடி நிகர லாபத்தை ஈட்டி, 4 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. பிரீமியம் வருவாய் அதிகரித்ததே இந்த வளா்ச்சிக்குக் காரணமாகக் கூறப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, பங்குதாரா்களுக்கு தலா ரூ.2.10 இறுதி ஈவுத்தொகை வழங்கவும், எச்டிஎஃப்சி வங்கிக்கு ரூ.1,000 கோடி மதிப்பிலான பங்குகளை ஒதுக்கவும் நிா்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

எச்டிஎஃப்சி சொத்து மேலாண்மை நிறுவனத்தின் (ஏஎம்சி) லாபம், மதிப்பீட்டு காலாண்டில் 2.4 சதவீதம் சரிந்து, ரூ.623 கோடியாக உள்ளது. எனினும், நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 17 சதவீதம் உயா்ந்து ரூ. 1,051.51 கோடியாக அதிகரித்துள்ளது.

முழுமையான 2025-26 நிதியாண்டில், இந்நிறுவனத்தின் லாபம் 16 சதவீதம் அதிகரித்து, ரூ.2,858.06 கோடியாக உள்ளது. இந்நிறுவனம் பங்குதாரா்களுக்கு ஒரு பங்குக்கு ரூ.54 ஈவுத்தொகை அறிவித்துள்ளது.