மும்பை: போர்நிறுத்த முயற்சிகள் குறித்த செய்திகளுக்கு மத்தியில், கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவைத் தொடர்ந்து, ஆரம்ப வர்த்தகத்தில் சரிந்த சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் பிறகு வெகுவாக மீண்டு வர்த்தகத்தை நிறைவு செய்தன.
இதற்கிடையில், வங்கிப் பங்குகளில் ஏற்பட்ட கொள்முதலை தொடர்ந்து சந்தையின் ஏற்றத்துக்கு இது பெரிதும் வழிவகுத்தது.
இன்றைய வர்த்தகத்தில், சென்செக்ஸ் 887.91 புள்ளிகள் உயர்ந்து 74,207.46 புள்ளிகளாக இருந்தது. வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 787.30 புள்ளிகள் உயர்ந்து 74,106.85 புள்ளிகளாகவும், நிஃப்டி 255.15 புள்ளிகள் உயர்ந்து, 22,968.25 புள்ளிகளாக நிலைபெற்றது.
சென்செக்ஸில் ட்ரென்ட் 7.89 சதவீதம் உயர்ந்து, மிகப்பெரிய ஏற்றத்தை கண்டது. ஆக்சிஸ் வங்கி, டைட்டன், லார்சன் & டூப்ரோ, அல்ட்ராடெக் சிமென்ட் மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகிய பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எச்.சி.எல் டெக் மற்றும் சன் பார்மா உள்ளிட்ட பங்குகள் சரிந்தன.
உலகளாவிய பிரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு 0.71 சதவீதம் சரிந்து 108.3 அமெரிக்க டாலராக உள்ளது.
ஆசிய சந்தைகளில், தென் கொரியாவின் முக்கிய குறியீடான கோஸ்பி மற்றும் ஜப்பானின் நிக்கெய் 225 குறியீடுகள் உயர்ந்தன. விடுமுறை காரணமாக ஹாங்காங் மற்றும் ஷாங்காயில் சந்தைகள் மூடப்பட்டிருந்தன.
புனித வெள்ளியை முன்னிட்டு, அமெரிக்க மற்றும் உள்நாட்டுப் பங்குச் சந்தைகள் வெள்ளிக்கிழமை அன்று விடுமுறை அளிக்கப்பட்டது.
இன்றைய சந்தையின் மீட்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட மிதமான சரிவை தொடர்ந்து, தற்காலிகப் போர் நிறுத்தத்திற்கான சாத்தியக்கூறுகள் குறித்த செய்திகளின் அடிப்படையில், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 105 அமெரிக்க டாலர் என்ற நிலைக்கு கீழே சென்றது.
தரவுகளின் அடிப்படையில், கடந்த வியாழக்கிழமை வர்த்தகத்தில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் 9,931.13 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்த நிலையில், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் 7,208.41 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கி உள்ளனர்.
Summary
Benchmark indices Sensex and Nifty staged a sharp rebound on Monday after falling in early trade following a correction in crude oil prices.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்திய பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவு!

பங்குச் சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 509 புள்ளிகள் உயர்வு!

போர் நிறுத்தம் எதிரொலி: எழுச்சியில் இந்திய பங்குச் சந்தை!

சரிவிலிருந்து மீண்ட சென்செக்ஸ், நிஃப்டி!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



