மும்பை: அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று அறிவித்த தற்காலிக போர் நிறுத்தம் அறிவிப்பைத் தொடர்ந்து, ஆசிய பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட ஏற்றத்தையடுத்து, உள்ளூரில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய இரண்டு குறியீடுகளும் கிட்டத்தட்ட 2 சதவீதம் மீண்டன.
இன்றைய காலை நேர வர்த்தகத்தில், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 1,793 புள்ளிகள் உயர்ந்து 74,489.39 புள்ளிகளாக இருந்தது. வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 1,372.06 புள்ளிகள் உயர்ந்து 74,068.45 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 399.75 புள்ளிகள் உயர்ந்து 22,912.40 புள்ளிகளாக நிலைபெற்றது.
சென்செக்ஸில் லார்சன் & டூப்ரோ, இன்டர்குளோப் ஏவியேஷன், எடர்னல், ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் அல்ட்ராடெக் சிமென்ட் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் பவர் கிரிட் மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய பங்குகள் சரிந்தன.
நிஃப்டி-யில் ஸ்மால்கேப் 100 மற்றும் நிஃப்டி மிட்கேப் 100 குறியீடு முறையே 0.77 சதவீதம் மற்றும் 1.10 சதவீதம் உயர்ந்தன.
ஆசிய சந்தைகள் இன்று மீண்டெழுந்த நிலையில், தென் கொரியாவின் முக்கிய குறியீடான கோஸ்பி, ஜப்பானின் நிக்கெய் 225 குறியீடும், ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடும் மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடும் கணிசமாக உயர்ந்தன.
ஐரோப்பிய சந்தைகள் பெரும்பாலும் சரிவுடன் வர்த்தகமான நிலையில் அமெரிக்க சந்தை நேற்று (திங்கள்கிழமை) உயர்வுடன் முடிவடைந்தன.
இதற்கிடையில், ஹோர்முஸ் நீரிணை சுற்றியுள்ள நிகழ்வுகள் குறித்த தெளிவான வழிகாட்டுதலுக்காக முதலீட்டாளர்கள் காத்திருப்பதால், எச்சரிக்கை உணர்வு நீடித்து வருகிதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (திங்கள்கிழமை) ரூ. 10,414.23 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ள நிலையில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ. 12,033.97 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.
உலகளாவிய பிரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய்க்கு ஒன்றுக்கு 1.96 சதவீதம் உயர்ந்து 101.9 அமெரிக்க டாலராக உள்ளது.
Summary
Benchmark stock indices Sensex and Nifty rebounded by nearly 2 per cent tracking a rally in Asian peers after US President Trump announced a temporary halt on strikes.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்திய பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவு!

பங்குச் சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 509 புள்ளிகள் உயர்வு!

பதற்றம் தணியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் பங்குச் சந்தை எழுச்சி; நிஃப்டி 348, சென்செக்ஸ் 1,186.77 புள்ளிகள் உயர்வு!

சரிவிலிருந்து மீண்ட சென்செக்ஸ், நிஃப்டி!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


