புதுதில்லி: இன்று வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தரவுகளின்படி உற்பத்தி, சுரங்கம் மற்றும் மின்சாரத் துறைகளின் மோசமான செயல்திறன் காரணமாக இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி மே 2025ல் ஒன்பது மாதங்களில் இல்லாத அளவுக்கு 1.2 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.
தொழில்துறை உற்பத்தி குறியீட்டின் அடிப்படையில் அளவிடப்படும் தொழிற்சாலை உற்பத்தி, மே 2024ல் 6.3 சதவிகிதம் அதிகரித்திருந்தது.
உற்பத்தித் துறையில், உற்பத்தி வளர்ச்சி மே 2025ல் 2.6 சதவிகிதமாகக் குறைந்துள்ளதாக தரவு சுட்டி காட்டுகிறது. இது கடந்த ஆண்டு 5.1 சதவிகிதமாக இருந்தது.
சுரங்க உற்பத்தி ஒரு வருடத்திற்கு முன்பு 6.6 சதவிகித வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது இது 0.1 சதவிகிதம் குறைந்துள்ளது.
2025 மே மாதத்தில் மின் உற்பத்தி 5.5 சதவிகிதம் குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலத்தில் இது 13.7 சதவிகிதமாக இருந்தது.
2026 நிதியாண்டின் ஏப்ரல் முதல் மே வரையான காலகட்டத்தில், தொழில்துறை உற்பத்தி 1.8 சதவிகிதம் வளர்ச்சியடைந்தது. இது ஒரு வருடத்திற்கு முன்பு 5.7 சதவிகிதமாக இருந்தது.
Summary: India industrial production growth slowed to a nine-month low of 1.2 per cent in May 2025.
இதையும் படிக்க: 4 நாள் ஏற்றத்திற்கு பிறகு சரிந்து முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எதிா்பாா்ப்புகள் என்ன? குறுந்தொழில்பேட்டைகள், காா் உற்பத்தி ஆலை

இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி 7.7% உயர்வு!

இந்தியாவின் மாதிரி வேக ஈனுலை: ஐஏஇஏ பாராட்டு

உற்பத்தி துறை மாா்ச்சில் கடும் சரிவு: 2.5 ஆண்டுகளில் இல்லாத மந்தநிலை
வீடியோக்கள்

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை


