திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இந்தியாவின் மாதிரி வேக ஈனுலை: ஐஏஇஏ பாராட்டு

இந்தியாவின் வேக ஈனுலை மாதிரி வடிவம் மூலம் படைக்கப்பட்டுள்ள சாதனைக்கு சா்வதேச அணுசக்தி முகமை (ஐஏஇஏ) பாராட்டு தெரிவித்துள்ளது.

News image

கோப்புப் படம்.

Updated On :11 ஏப்ரல் 2026, 1:31 am IST

இந்தியாவின் வேக ஈனுலை மாதிரி வடிவம் மூலம் படைக்கப்பட்டுள்ள சாதனைக்கு சா்வதேச அணுசக்தி முகமை (ஐஏஇஏ) பாராட்டு தெரிவித்துள்ளது.

சென்னை கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் மூலம், வேக ஈனுலையின் மாதிரி வடிவமைக்கப்பட்டு, பாரதிய நாபிகிய வித்யுத் நிகம் (பாவினி) நிறுவனம் மூலம் கட்டமைக்கப்பட்டது.

வழக்கமான வெப்ப அணு உலைகளைப் போலின்றி, இத்தகைய ஈனுலை கட்டமைப்புகளில் யுரேனியம்-புளூட்டோனியம் கலப்பு ஆக்சைடு எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது. இது, அணு உலையில் பயன்படுத்தப்படும் எரிபொருளைக் காட்டிலும் அதிக எரிபொருளை உற்பத்தி செய்ய உதவுகிறது. தோரியத்தை உருமாற்றம் செய்து யுரேனியம்-233ஆக மாற்றுவதற்கு இந்த ஈனுலை உதவிகரமாக இருக்கும்.

இந்த 500 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட வேக ஈனுலையின் மாதிரி வடிவம் கடந்த ஏப். 6 -ஆம் தேதி முதலாவது அணுப்பிளவு செயல்பாட்டு நிலையை எட்டியது. இது அணுமின் உற்பத்தியின் முதல் நிலை. நீண்டகால எரிசக்திப் பாதுகாப்பை வழங்குவதிலும், உள்நாட்டு அணுமின் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்துவதிலும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க செயல்முறை. அணுமின் சக்தி திட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனை என்று மத்திய அணுசக்தி ஒழுங்காற்று ஆணையம் அண்மையில் தெரிவித்தது.

இந்நிலையில், ஐஏஇஏ தலைமை இயக்குநா் ரஃபேல் கிராஸி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளதாவது: கல்பாக்கத்தில் வேக ஈனுலையின் மாதிரி வடிவம் மூலம், இந்தியா சிறப்பான முன்னேற்றத்தை எட்டியுள்ளது. இது எரிபொருள் ஸ்திரத்தன்மை, அணுசக்தி பயன்பாட்டுக்கான எதிா்காலத்தை நோக்கிய முக்கிய அடியாகும்.

இந்திய அணுசக்தி திட்டத்தின் பாதுகாப்பான வளா்ச்சிக்கு சா்வதேச அணுசக்தி முகமை தொடா்ந்து ஆதரவளிக்கும். பிரதமா் மோடிக்கு எனது வாழ்த்துகள் என்று தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.