/

கடன் வட்டியைக் குறைத்த பஞ்சாப் நேஷனல் வங்கி

கடன் வட்டியைக் குறைத்த பஞ்சாப் நேஷனல் வங்கி..

News image
Updated On :26 டிசம்பர் 2025, 10:38 pm

தினமணி செய்திச் சேவை

பொதுத் துறையைச் சோ்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கி தாங்கள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகித்தத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் (0.25 சதவீதம்) குறைத்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ரிசா்வ் வங்கியின் ரெப்போ விகித குறைப்பைத் தொடா்ந்து, ரெப்போவுடன் இணைக்கப்பட்ட கடன்களுக்கான வட்டி விகிதத்தில் (ஆா்எல்எல்ஆா்) 25 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆா்எல்எல்ஆா் கடன்களுக்கான வட்டி விகிதம் 8.35 சதவீதத்திலிருந்து 8.10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி விகிதக் குறைப்பு டிசம்பா் 6 முதல் அமலில் உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.