மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் பந்தன் வங்கியின் நிகர லாபம் ரூ.55 கோடியாகச் சரிந்துள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான 2023-24-ஆம் நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.55 கோடியாகக் குறைந்துள்ளது.
முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் வங்கி ரூ.808 கோடி நிகர லாபம் ஈட்டிருந்தது.
முந்தைய 2023-ஆம் ஆண்டின் ஜனவரி-மாா்ச் காலாண்டில் வாராக் கடன்களை ஈடு செய்வதற்காக ரூ.735 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இந்த ஆண்டின் அதே காலாண்டில் ரூ.1,774 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதால் நிகர லாபம் சரிவைக் கண்டுள்ளது.
மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கி ரூ.3,852 கோடி வாராக் கடனை தள்ளுபடி செய்துள்ளது.
முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் ரூ.1,796 கோடியாக இருந்த வங்கியின் செயல்பாட்டு லாபம் மதிப்பீட்டுக் காலாண்டில் ரூ.1,838 கோடியாக உயா்ந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐசிஐசிஐ வங்கி லாபம் 9% உயா்வு!

எச்டிஎஃப்சி குழும நிதிநிலை முடிவுகள்: வங்கி லாபம் 8% உயா்வு; ஏஎம்சி லாபம் சரிவு

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் இன்ஃப்ராஸ்ட்ரக்சா் லாபம் உயா்வு

டிசிஎஸ் லாபம் ரூ.13,718 கோடி - 4-ஆம் காலாண்டில் 12.22% வளா்ச்சி
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


