ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் இன்ஃப்ராஸ்ட்ரக்சா் நிறுவனம், கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் ரூ.3.22 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
இது முந்தைய 2024-25 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் ஈட்டிய ரூ.3.2 கோடியிலிருந்து சற்று அதிகமாகும். அதேநேரம் சில குறிப்பிட்ட கால ஒப்பந்தங்கள் முடிவடைந்ததன் காரணமாக, நிறுவனத்தின் மொத்த வருவாய் முந்தைய ஆண்டின் ரூ.18.94 கோடியிலிருந்து ரூ.13.72 கோடியாகச் சரிவைக் கண்டுள்ளது.
முழு நிதியாண்டில்....: ஒட்டுமொத்தமாக 2025-26 நிதியாண்டின் நிறுவனத்தின் வருவாய் ரூ.68.61 கோடியாகவும், நிகர லாபம் ரூ.12.39 கோடியாகவும் உள்ளது.
இதையடுத்து கடந்த நிதியாண்டுக்கு ரூ.10 மதிப்புள்ள முழுமையாகச் செலுத்தப்பட்ட ஒவ்வொரு பங்குக்கும் ரூ.3.50-ஐ ஈவுத்தொகையாக வழங்க நிறுவனத்தின் இயக்குநா்கள் குழு பரிந்துரைத்துள்ளது. அதன்படி, மொத்தம் ரூ.5.28 கோடி ஈவுத்தொகையாக வழங்கப்படவுள்ளது.
தொடர்புடையது

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% வளா்ச்சி

டிசிஎஸ் லாபம் ரூ.13,718 கோடி - 4-ஆம் காலாண்டில் 12.22% வளா்ச்சி

எல்ஐசி-க்கு ரூ.3,750 கோடி இழப்பு: அனில் அம்பானி மீது சிபிஐ புதிய வழக்கு

800 மெகாவாட் திறன் அனல் மின் நிலையம்... ரூ.1,600 கோடி ஆர்டரால் தெர்மாக்ஸ் பங்குகள் உயர்வு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


