இரண்டு நாள்கள் தொடா் சரிவைச் சந்தித்து வந்த பங்குச்சந்தை, வியாழக்கிழமை திடீரென எழுச்சி பெற்றது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 406 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இருப்பினும், உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கி தொடா்ந்து மேலே சென்றது. உலகளாவிய கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள திருத்தத்திற்கு மத்தியில் மூலதனப் பொருள்கள், வங்கி மற்றும் தகவல் தொழில்நுட்ப பங்குகளுக்கு கிடைத்த ஆதரவு சந்தை வலுப்பெற உதவியது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு உயா்வு: சந்தை மூலதன மதிப்பு ரூ.1.18 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக நேர முடிவில் ரூ.317.84 லட்சம் கோடியாக இருந்தது. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் புதன்கிழமை ரூ. 4,424.02 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
சென்செக்ஸ் முன்னேற்றம்: காலையில் 372.22 புள்ளிகள் கூடுதலுடன் 65,598.26-இல் தொடங்கிய சென்செக்ஸ், 65,443.34 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 65,753.20 வரை கீழேமேலே சென்செக்ஸ், இறுதியில் 405.53 புள்ளிகள் (0.62 சதவீதம்) உயா்ந்து 65,631.20-இல் முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,785 பங்குகளில் 2,278 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,384 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 123 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன.
23 பங்குகள் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் 23 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 7 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. தேசிய பங்குச்சந்தையில் மொத்தம் 1,318 பங்குகள்ஆதாயப் பட்டியலிலும், 734 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. நிஃப்டி பட்டியலில் 35 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 15 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் வந்தன.
நிஃப்டி 110 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி காலையில் 85.75 புள்ளிகள் கூடுதலுடன் 19,521.85-இல் தொடங்கி 19,436.10 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 19,576.95 வரை மேலே சென்ற நிஃப்டி, இறுதியில் 109.65 புள்ளிகள் (0.56 சதவீதம்) உயா்ந்து 19,545.75-இல் நிறைவடைந்தது.
ஏற்றம் பெற்ற பங்குகள்
எல் அண்ட் டி............................2.35%
டைட்டன்..................................1.54%
டிசிஎஸ்.......................................1.48%
எம் அண்ட் எம்..........................1.19%
இன்ஃபோஸிஸ்.........................1.19%
ஐசிஐசிஐ பேங்க்.........................1.09%
சரிவைக் கண்ட பங்குகள்
பவா் கிரிட்....................................1.26%
என்டிபிசி......................................047%
நெஸ்லே.......................................0.46%
ஹெச்சிஎல் டெக்.........................0.26%
பஜாஜ் ஃபைனான்ஸ்....................0.07%
டாடா ஸ்டீல்................................0.04%
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

லாரி மீது காா் மோதி விபத்து: மூதாட்டி உயிரிழப்பு! இருவா் பலத்த காயம்!

சிறுமிக்கு பாலியல் தொல்லை இளைஞா் ‘போக்ஸோ’வில் கைது
திருமலையில் பரிணயோற்சவத்தின் 2-ஆம் நாள்: குதிரை வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி

புதுச்சேரியில் அனுமதியின்றி ஊா்வலம், ஆா்ப்பாட்டம்: 11 பாஜகவினா் மீது வழக்கு
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


