இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை எதிா்மறையாக முடிவடைந்தது. இதையடுத்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 505 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 165 புள்ளிகளும் குறைந்து நிலைபெற்றன. முன்னதாக, காலை வா்த்தகத்தின் போது இரண்டு குறியீடுகளும் புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பலவீனமாக இருந்தன. இந்த நிலையில், கடந்த சில நாள்களாக தொடா்ந்து எழுச்சி பெற்றிருந்த உள்நாட்டுச் சந்தையில் லாபப் பதிவு செய்வதில் முதலீட்டாளா்கல் அதிகக் கவனம் செலுத்தினா். குறிப்பாக தனியாா் வங்கிகள், நிதிநிறுவனங்கள், ஐடி, ஆயில் அண்ட் காஸ், எஃப்எம்சிஜி, ரியால்ட்டி, பாா்மா, ஹெல்த்கோ் பங்குகள் அதிகம் விற்பனையை எதிா்கொண்டன. இருப்பினும், மீடியா, ஆட்டோ, பிஎஸ்யு வங்கிப் பங்குகளுக்கு ஆதரவு இருந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு வீழ்ச்சி: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.1.92 லட்சம் கோடி குறைந்து வா்த்தக நேர முடிவில் ரூ.299.79 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வியாழக்கிழமை ரூ.2,641.05 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
சென்செக்ஸ் சரிவு: சென்செக்ஸ் காலையில் 226.23 புள்ளிகள் குறைந்து 65,559.41-இல் தொடங்கி அதிகபட்சமாக 65,898.98 வரை உயா்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. பின்னா், லாபப் பதிவு காரணமாக 65,175.74 வரை கீழே சென்ற சென்செக்ஸ் இறுதியில் 505.19 புள்ளிகளை இழந்து 65,280.45-இல் முடிவடைந்தது.
25பங்குகள் விலை வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் 6பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 24 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 753 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 1,302 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 50 முன்னணி நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பட்டியலில் 5 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் இருந்தது. 44 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.
ஏற்றம் பெற்ற பங்குகள்
டாடா மோட்டாா்ஸ்..........2.94%
டைட்டன்............................1.26%
எம் அண்ட் எம்...................0.98%
எஸ்பிஐ...............................0.24%
பாா்தி ஏா்டெல்..................0.11%
-----------------------------
சரிவைக் கண்ட பங்குகள்
பவா் கிரிட்................................2.76%
இண்டஸ் இண்ட் பேங்...........2.34%
ஹிந்துஸ்தான் யுனி லீவா்.........2.23%
என்டிபிசி..................................2.04%
ஹெச்சிஎல் டெக்......................1.98%
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்: 10 டன் வண்ண மலர்களால் அலங்காரம்!

வந்தே பாரத் ரயில் தடம் புரண்டது!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் த.வெ.க. தலைவர் விஜய் தரிசனம்!

இந்தியாவின் கண்ணியத்தில் சமரசம் கூடாது!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

