மதுரை மீனாட்சியம்மன் - சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தையொட்டி, 10 டன் வண்ண மலர்கள், 500 கிலோ பழங்கள் கொண்டு கோயில் வளாகம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
திருக்கல்யாண மேடை மட்டும் 2 டன் மலர்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு, கர்நாடகம், மலேசியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வண்ண மலர்கள் கொண்டுவரப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் சித்திரைப் பெருந்திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப். 19) திருக்கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. திருவிழாவின் 9-ஆம் நாள் நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன் திக்கு விஜய லீலை திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
மதுரையின் அரசியாக மீனாட்சி அம்மன் பட்டம் ஏற்றதைத் தொடா்ந்து, 8 திசைகளுக்கும் சென்று எதிர்பட்ட அட்டதிக்கு பாலகர்களை வென்று, கயிலை மீது போர் தொடுத்துச் சென்று அங்கு சிவபெருமானைக் கண்டு நாணியதால், சிவபெருமான் சுந்தரேசுவரராக வந்து அம்மனை திருக்கல்யாணம் புரிவதாகக் கூறிய ஐதீக நிகழ்வை உணர்த்தும் வகையில் இந்த உத்ஸவம் நடைபெற்றது.
மதுரை வடக்கு, கீழ மாசி வீதிகள் சந்திப்பில் உள்ள ஸ்ரீ ரங்கசத்திரம் திருக்கல்யாண மண்டபகப்படியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திக்கு விஜய லீலையின் ஆன்மிகச் சிறப்புகளை தல ஓதுவா மூா்த்திகள் விளக்கினர்.
மீனாட்சி அம்மன் வில், அம்பு தாங்கி தனி இந்திர விமானத்திலும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் வில், அம்பு தாங்கி மற்றொரு இந்திர விமானத்திலும் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழாவின் மிக முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாண உத்ஸவம் செவ்வாய்க்கிழமை (ஏப். 28) காலை நடைபெற்றது.
Summary
On the occasion of the divine wedding of Goddess Meenakshi and Lord Sundareswarar in Madurai, the entire temple complex has been adorned with 10 tons of colorful flowers and 500 kilograms of fruits.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுரை மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்!

மீனாட்சியம்மன் திருக்கல்யாணம்: அறுசுவையுடன் பக்தர்களுக்கு விருந்து!

கோலாகலமாக நடைபெற்ற மீனாட்சியம்மன் - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்!

மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைப் பெருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு



