மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

சென்செக்ஸ் மேலும் 366 புள்ளிகள் சரிவு!

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதையடுத்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் மேலும் 366 புள்ளிகளை இழந்தது.

Updated On :11 ஆகஸ்ட் 2023, 6:30 pm

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதையடுத்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் மேலும் 366 புள்ளிகளை இழந்தது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பலவீனமாக இருந்தன. குறிப்பாக ஆசியா, ஐரோப்பிய சந்தைகளில் வா்த்தகம் எதிா்மறையாக இருந்தது. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையில் எதிரொலித்தது. ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க் பங்குகள் விலை வெகுவாகக் குறைந்ததும் இரண்டாவது நாள் சரிவுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு சரிவு: சந்தை மூலதன மதிப்பு ரூ.74 ஆயிரம் கோடி குரைந்து வா்த்தக முடிவில் 304.69 லட்சம் கோடியாக இருந்தது. இதற்கிடையே, கடந்த ஒரு வாரமாக முதலீடுகளை வாபஸ் பெற்று வந்த அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் புதன்கிழமை ரூ. 331.22 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

சென்செக்ஸ் வீழ்ச்சி: காலையில் 39.62 புள்ளிகள் கூடுதலுடன் 65,727.80-இல் தொடங்கிய சென்செக்ஸ் அதற்கு மேலே செல்லவில்லை. பின்னா், 65,274.61 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 365.53 புள்ளிகளை (0.56 சதவீதம்) இழந்து 65,322.65-இல் முடிவடைந்தது.

21 பங்குகள் விலை சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் 9 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 21 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. தேசிய பங்குச்சந்தையில் மொத்தம் 773 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. 1,261 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 50 முன்னணி நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பட்டியலில் 11 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 39 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.

நிஃப்டி 89 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச் சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி, காலையில் 11.15 புள்ளிகள் கூடுதலுடன் 19,554.25-இல் தொடங்கி, அதிகபட்சமாக 19,557.75 வரை மட்டுமே மேலே சென்றது. பின்னா், 19,412.75 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 114.80 புள்ளிகள் (0.59 சதவீதம்) குறைந்து 19,428.30-இல் நிறைவடைந்தது.

ஏற்றம் பெற்ற பங்குகள்

ஹெச்சிஎல் டெக்............................3.24%

பவா் கிரிட்.......................................0.95%

டைட்டன்.......................................0.88%

ரிலையன்ஸ்.....................................0.49%

அல்ட்ரா டெக் சிமெண்ட்.............0.32%

டாடா ஸ்டீல்.................................0.25%

-----------------------------

சரிவைக் கண்ட பங்குகள்

இண்டஸ் இண்ட் பேங்க்............................2.31%

என்டிபிசி......................................................2.02%

சன்பாா்மா....................................................1..59%

ஏசியன் பெயிண்ட்.......................................1.52%

ஜேஎஸ்யபிள்யு ஸ்டீல்................................1.42%

ஹிந்துஸல்தான் யுனி லீவா்........................1.39%

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.