ஒரு நாள் விடுமுறைக்குப் பிறகு புதன்கிழமை தொடங்கிய பங்குச் சந்தையில் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. இறுதியில் எதிர்மறையாக முடிந்தது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 36 புள்ளிகளை இழந்து 58,817.29-இல் நிலைபெற்றது.
புவிசார் அரசியல் கவலைகள் அதிகரித்துள்ள நிலையில், உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பலவீனமாக இருந்தன. இந்த நிலையில், உள்நாட்டுச் சந்தை நேர்மறையாகத் தொடங்கினாலும், பெரும்பாலான நேரம் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக ஐடி, ரியல் எஸ்டேட் நிறுவனப் பங்குகளில் லாபப் பதிவு இருந்தது. அதே சமயம், மெட்டல், ஆயில் அண்ட் காஸ் நிறுவனப் பங்குகளுக்கு வரவேற்பு காணப்பட்டது என்று தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த திங்கள்கிழமை அன்று ரூ.1,449.70 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.
1,871 பங்குகள் விலை
வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,524 நிறுவனப் பங்குகளில் 1,871 பங்குகள் விலை குறைந்தன. 1,532 பங்குகள் விலையுயர்ந்த பட்டியலில் இடம் பெற்றன. 121 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 129 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 36 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.44 ஆயிரம் கோடி குறைந்து வர்த்தக முடிவில் ரூ.272.43 லட்சம் கோடியாக இருந்தது.
சென்செக்ஸ் வீழ்ச்சி: காலையில் 124.27 புள்ளிகள் கூடுதலுடன் 58,977.34-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 58,984.32 வரை உயர்ந்தது. பின்னர், 58,583.36 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 35.78 புள்ளிகள் (0.06 சதவீதம்) குறைந்து 58,817.29-இல் நிலைபெற்றது. வர்த்தகத்தின் போது ஒரு கட்டடத்தில் சென்செக்ஸ் உச்சநிலையில் இருந்து 400.96 புள்ளிகளை இழந்திருந்தது.
டாடா ஸ்டீல் முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 17 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 13 பங்குகள் விலையுயர்ந்த பட்டியலில் வந்தன. இதில் பிரபல ஸ்டீல் உற்பத்தி நிறுவனமான டாடா ஸ்டீல் 1.91 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக,பார்தி ஏர்டெல், ஐசிஐசிஐ பேங்க், எல் அண்ட் டி, இண்டஸ் இண்ட் பேங்க், சன்பார்மா உள்ளிட்டவை 1 முதல் 1.50 சதவீதம் உயர்ந்தன. மேலும், ரிலையன்ஸ்,
எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், பஜாஜ் ஃபைனான்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் விலையுயர்ந்த பட்டியலில் இருந்தன.
பஜாஜ் ஃபைனான்ஸ் கடும் சரிவு: அதே சமயம், பிரபல தனியார் நிதி நிறுவனமான பஜாஜ் ஃபைனான்ஸ் 2.66 சதவீதம், என்டிபிசி 2.20 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக, ஹெச்சிஎல் டெக், விப்ரோ, ஏசியன் பெயிண்ட், அல்ட்ரா டெக் சிமெண்ட், எஸ்பிஐ,
இன்ஃபோஸிஸ், ஆக்ஸிஸ் பேங்க் உள்ளிட்டவை 1முதல் 1.40 சதவீதம் வரை விலை குறைந்தன. மேலும், கோட்டக் பேங்க், ஐடிசி, மாருதி சுஸýகி, டிசிஎஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் வீழ்ச்சிப் பட்டியலில் இடம் பெற்றன.
நிஃப்டி 10 புள்ளிகள் உயர்வு: தேசிய பங்குச் சந்தையில் 1,107 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. 850பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. நிஃப்டி பட்டியலில் 30 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 20 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இடம் பெற்றன. வர்த்தக முடிவில் நிஃப்டி 9.65 புள்ளிகள் (0.06 சதவீதம்) உயர்ந்து 17,534.75-இல் நிலைபெற்றது. காலையில் 17,566.10-இல் தொடங்கிய நிஃப்டி அதிகபட்சமாக 17,566.10 வரை உயர்ந்தது. பின்னர், ஒரு கட்டத்தில் 17,442.80 வரை கீழே சென்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மிட்செல் சாண்ட்னருக்கு மாற்று வீரராக மும்பை இந்தியன்ஸில் இணைந்த கேசவ் மகாராஜ்!

உன்னை நம்பி பாடல் வெளியானது!

7 ஓவர்களில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!
அரசியல் பகடைக் காய்களா குழந்தைகள்? விஜய் மீது புகார்!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


