ஆண்ட்ராய்டுக்கான ஜிபோர்ட் "ஈமோஜி கிச்சன்" என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள். இது பயனர்கள் வெவ்வேறு ஈமோஜிகளை மாஷ் அப் செய்ய அனுமதிக்கும் அதன்பின் தகவலை அனுப்பும்போது அவற்றை ஸ்டிக்கர்களாகப் பயன்படுத்தலாம்.

"உங்கள் ஆண்ட்ராய்ட் தொலைபேசியில் ஜிபோர்டைப் பயன்படுத்துவதன் மூலம், எந்தவொரு ஸ்மைலி ஈமோஜியையும் தட்டினாலும், ஈமோஜி கிச்சன் கூகுள் வடிவமைப்பாளர்களால் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பல ஸ்டிக்கர்களை வெளிப்படுத்தும். எனவே நீங்கள் ஒரு கெளபாய் தொப்பி ஈமோஜியின் முகத்தைத் தட்டும்போது - வாவ், இப்போது உங்கள் திரையில் குரங்கு கெளபாய் வெளிப்படும், போலவே பேய் கெளபாய், சிரிக்கும் கெளபாய், முத்தமிடும் கெளபாய், காதல் கெளபாய், என வெவ்வேறு கெளபாய் உருவங்கள் வெளிப்படும்." என்று நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜிமெயில், கூகுள் செய்திகள், மெஸஞ்சர், ஸ்னாப்ஷாட், டெலிகிராம், வாட்ஸ்அப் மற்றும் பிற பயன்பாடுகள் முழுவதிலும் இந்த ஸ்டிக்கர்கள் செயல்படும்.

"ஈமோஜிகள் நீண்ட காலமாக பயன்பாட்டில் இருந்து வருகின்றன, பயனர்கள் மகிழ்ச்சியான குறியீடுகளையும், மனஉணர்வுகளையும் வெளிப்படுத்த வார்த்தைகள் மற்றும் ஈமோஜிக்களையும் ஒன்றிணைத்து உருவாக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் பெயர்ச்சொற்களை வினைச்சொற்களாக மாற்றுவது, முற்றிலும் புதிய கருத்துக்களை உருவாக்குவதற்காகவும் ஈமோஜிக்கள் பயன்படுகின்றன" என்று நிறுவனம் மேலும் கூறியது.

இந்தப் புதிய ஈமோஜி ஸ்டிக்கர் பேக்கில் டெவலப்பர் மேக்சென்ஸ் கியூக்னொல்லே உருவாக்கிய 40 ஈமோஜி சேர்க்கைகள் உள்ளன என்பது குறிபிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தரம் இல்லாத கேன் குடிநீர் விற்பனை செய்தால் ரூ. 5,000 அபராதம்!

வருங்கால ஊடக உலகம்

விண்வெளி மாயம் 1000

எரிக் ஹாப்ஸ்பாம்
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு


