தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் இந்த ஆண்டு சுமார் 25 லட்சம் கேலக்ஸி இஸட் ஃபிளிப் மொபைல்களை தயாரித்து உலக சந்தைக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது.
சில தொழில்துறை வட்டாரங்களுக்கு இடையே இந்த மொபைல் சான் பிரான்சிஸ்கோவில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் நிகழ்வில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. வரவிருக்கும் கேலக்ஸி இசட் ஃபிளிப்பின் 5 லட்சம் போன்களின் முதல் கட்ட வரிசையை உருவாக்கத் தயாராகி வருவதாகக் கூறியுள்ளது.
இந்த மொபைலின் விலை 60,860 முதல் 2,91,295 வரை இருக்கும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
ஸ்னாப்டிராகன் 710 சிப்செட்டால் இயக்கப்படும் மோட்டோரோலா ரேஸரின், 500 1,500 விலையை விட இதன் விலை கணிசமாகக் குறைவாக உள்ளது. அதே நேரத்தில் கேலக்ஸி இஸட் ஃபிளிப் ஸ்னாப்டிராகன் 855 மொபைல் இயங்குதளத்தைக் கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, இந்த மொபைல் சீனாவின் 3 சி சான்றிதழ் தரவுத் தளத்தில் உள்ளது. 15W சார்ஜருடன் வருவதாக அறிவித்துள்ளது.
இந்த மொபைல் முந்தயவற்றுடன் பொருந்தக்கூடிய வகையிலான SM-F700 மாதிரி எண்ணைக் கொண்டுள்ளது.
இது 6-லிருந்து 7 வரையிலான அங்குலம் உயரமான ஆஸ்பெக்ட் ரேஷியோவைக் கொண்டிருக்கும். இந்த ஃபோனை செங்குத்தாக மடித்து திறக்கலாம்.
இந்த மொபைலின் வெளிப்புறத்தில் இரட்டை கேமரா அமைப்பு உள்ளது மற்றும் 10 எம்.பி செல்பி கேமரா இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மொபைலால் 8 கே விடியோவை பதிவு செய்ய முடியும், மேலும் 5ஜி பதிப்பானது தென் கொரியாவில் வெளியிடப்படும்.
இந்த ப்ளிப் மடிப்பில் பிளாஸ்டிக்கிற்கு பதிலாக "அல்ட்ரா தின் க்ளாஸ் டிஸ்ப்ளே" பொருத்தப்படும் என்று கூறப்படுகிறது.
தென் கொரியத் தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் அல்ட்ரா தின் க்ளாஸ் டிஸ்ப்ளே அல்லது யு.டி.ஜிக்கு, ஐரோப்பாவில் காப்புரிமைப் பெற விண்ணப்பித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தரம் இல்லாத கேன் குடிநீர் விற்பனை செய்தால் ரூ. 5,000 அபராதம்!

வருங்கால ஊடக உலகம்

விண்வெளி மாயம் 1000

எரிக் ஹாப்ஸ்பாம்
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு


