மும்பை: வங்கிகளுக்கு வழங்கும் குறுகியகாலக் கடன்களஉக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதமாக ரிசர்வ் வங்கி இன்று குறைத்தது.
இதையடுத்து, வீட்டுகள் மற்றும் வாகனங்களுக்கான கடன் வட்டி விகிதம் குறையும் எனத் தெரிகிறது.
இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை ஆய்வுக் கூட்டம் இன்று மும்பையில் நடைபெற்றது. அப்போது, வங்கிகளுக்கு வழங்கும் குறுகியகாலக் கடனுக்கான வட்டி விகிதங்களை குறைப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக, வட்டி விகிதங்களை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசும், தொழில் நிறுவனங்களும் ரிசர்வ் வங்கியை வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில், ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டி விகிதங்களை கால் சதவீதம் குறைக்க முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:
ரிசர்வ் வங்கியிடமிருந்து குறுகியகால அடிப்படையில் வங்கிகள் பெறும் கடனுக்கான வட்டி விகிதம் (ரெபோ ரேட்) 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு 6.75 சதவீதத்திலிருந்து 6.50 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
பிற வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடனுக்கான வட்டி விகிதம் (ரிவர்ஸ் ரெபோ ரேட்) 0.25 சதவீதம் உயர்த்தப்பட்டு 5.75 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது. வங்கிகளின் ரொக்க கையிருப்பு விகிதம் 4 சதவீதம் என்ற அளவிலேயே நீடிக்கும்.
முன்னதாக, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வட்டி விகிதம் வட்டி விகிதம் 0.50 சதவீதம் குறைக்கப்பட்டது. அதன் பிறகு, ஆறுமாதங்கள் கழித்து வட்டி விகிதம் தற்போதுதான் குறைக்கப்படுகிறது.
பிற வர்த்தக வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதங்களை ஏற்கெனவே 0.25%-0.50% குறைத்துள்ளன. இந்நிலையில், ரிசர்வ் வங்கி நடவடிக்கையால் வீட்டு வசதி, வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் மேலும் குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, தனியார் முதலீடுகளும் அதிகரிக்க இந்த வட்டி குறைப்பு நடவடிக்கை உதவியாக அமையும்.
ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு நடவடிக்கை நாட்டின் பொருளாதார வளர்ச்சியை சிறப்பான அளவில் ஊக்குவிக்க உதவும் என்று மத்திய நிதித் துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார்.
பல வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதங்களை ஏற்கெனவே குறைத்துள்ளன. இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை அவ்வங்கிகள் மேலும் வட்டியை குறைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன என்று பொருளாதார விவகாரங்களுக்கான செயலர் சக்தி காந்ததாஸ் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்களிப்பதற்காக சிவகங்கை சென்றவா் பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் மயங்கி விழுந்து பலி

எஸ்.எஸ்.பாலாஜி, ஆளுர் ஷாநவாஸ் ஆகியோருக்கு விசிக-வில் முக்கியப் பொறுப்பு!

பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில் பூக்களின் விலை உயா்வு

நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,741 போ் எழுதுகின்றனா்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


