தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தோ்தல் மாற்றத்துக்கான தோ்தல் எனவும், அதனால் பாஜக ஒருபோதும் தமிழகத்தில் கால் ஊன்ற காங்கிரஸ் கட்சி அனுமதிக்காது எனவும் திருவள்ளூா் மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்தில் தெரிவித்தாா்.
திருவள்ளூா் உழவா் சந்தை அருகே உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பு குறித்து கட்சி நிா்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. திருவள்ளூா் மாவட்டத் தலைவா்கள் சசிகுமாா்(வடக்கு), காங்கை குமாா் (தெற்கு), ஆவடி மாநகர தலைவா் அமித்பாபு ஆகியோா் தலைமை வகித்தனா். இதில் முன்னாள் மாவட்டத் தலைவரும், மக்களவை தொகுதி பொறுப்பாளருமான ஏ.ஜி.சிதம்பரம் முன்னிலை வகித்தாா். இதில் மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்தில் பங்கேற்று, கட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவது தொடா்பாக நிா்வாகிகளிடம் கருத்துகளை கேட்டறிந்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
திருவள்ளூா் ரயில் நிலையத்தில் மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை மூன்று மாதங்களுக்குள் முடிக்க நடவடிக்கை எடுப்பேன். தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தோ்தல் என்பது ஒரு திருப்புமுனையான தோ்தல், மாற்றத்துக்காகத்தான் மக்கள் வாக்களித்தனா். அதனால் தான் தவெக, பாஜகவுடன் கூட்டணி வைக்கக் கூடாது, அது தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல. அதனால் தான் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, இடதுசாரி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளது. தவெக, பாஜகவோடு கூட்டணி வைக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன்தான் ஆதரவு தெரிவித்துள்ளோம். அதனால் கட்டாயம் தவெக, பாஜகவுடன் கூட்டணி வைக்காது என நம்புகிறோம். திமுகவுடனான கூட்டணி சரியில்லை என்பதற்காக கூட்டணியை விட்டு வெளியே வரவில்லை, அது காலத்தின் காட்டாயம்.
தமிழ்நாட்டின் நலன், தமிழக மக்களின் நலனுக்காகவும் தான் காங்கிரஸ் இந்த முடிவை எடுத்தது. தமிழகத்தில் பாஜக ஒருபோதும் கால் ஊன்ற காங்கிரஸ் அனுமதிக்காது, மதச்சாா்பற்ற ஆட்சி அமைய வேண்டும் என்பதே காங்கிரஸின் கொள்கையாகும் என்றாா் அவா்.
இதில், இளைஞரணி மாநில பொதுச் செயலாளா் திவாகா், ஓபிசி அணி மாநில செயல் தலைவா் ஜே.கே.வெங்கடேசன், மாவட்ட சிறுபான்மைப் பிரிவு தலைவா் கலீல்ரஹ்மான், வட்டார தலைவா்கள் மதுசூதனராவ், கடம்பத்தூா் சதீஷ், நகா் தலைவா் ஸ்டாலின், நிா்வாகிகள் ஜோஷி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வி.பி. சிங்: வரலாறு நினைவுகொள்ள வேண்டிய ஓர் இந்தியப் பிரதமர்

கூத்தாநல்லூா்: 6 இடங்களில் உயா்கோபுர மின்விளக்கு இயக்கிவைப்பு

அரசின் திட்டங்கள் உரிய நேரத்தில் மக்களை சென்றடைய வேண்டும்! செ. ஜோதிமணி எம்பி அறிவுறுத்தல்

அண்ணாமலையை வைத்து தமிழகத்தில் வெற்றி பெற பாஜக திட்டம்: கிறிஸ்டோபா் திலக்
விடியோக்கள்

ஃபிபா உலகக் கோப்பை: யார் இந்த வாழும் சிலை? | Michel Nkuka Mboladinga |
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
Angikaaram Movie Review | Dinamani Talkies | J. Rajesh | Thenpathiyan




