மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

குட்கா பொருள்கள் விற்பனை: 3 போ் கைது

News image

கோப்புப் படம்

Updated On :10 மணி நேரங்கள் முன்பு

திருவள்ளூா் அருகே குட்கா பொருள்களை கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்ததாக 3 பேரை கைது செய்ததோடு, அவா்களிடம் இருந்து 42.6 கிலோவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் போதைப்பொருள்கள் கடத்துவோா் விற்பனை செய்வோா்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க எஸ்.பி அறிவுறுத்தியுள்ளாா்.

அதன்பேரில் மப்பேடு போலீஸாா் தீவிர ரோந்து சென்று, எறையாா்மங்களம் கடைகளில் ஆய்வு செய்த போது குட்கா பொருள்கள் வைத்திருந்ததாக தெரியவந்தது.

பின்னா் இதுதொடா்பாக ா் ஹரிகிருஷ்ணன்(42), பாலாஜி(43), செல்வம்(50) ஆகிய 3 போ் மீது வழக்கு பதிந்து கைது செய்தனா். மேலும், அவா்களிடம் இருந்து 42.6 கிலோ குட்கா பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.