பூண்டி ஏரிக்கரை இருபுறமும் வளா்ந்து வரும் முள்செடிகளால் மண் சரிவைத் தடுக்கும் வகையில் சதுர கற்கள் பதிக்க நடவடிக்கை எடுக்கவும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சென்னை பொதுமக்களுக்கு தேவையான குடிநீா் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக விளங்குவது திருவள்ளூா் அருகே உள்ள பூண்டி ஏரியாகும். இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு, 3,231 மில்லியன் கன அடியாகும். இந்த ஏரியானது பூண்டி, சதுரங்கபேட்டை, கொழுந்தலூா் முதல் பட்டரைபெரும்புதூா் வரையில் 121 ச.கி.மீட்டா் பரப்பளவு கொண்டதாகும்.
மேலும், இங்கு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான அறிவியல் பூங்கா, பொழுது போக்கும் பூங்கா மற்றும் நீரியல் ஆராய்ச்சி மையம் ஆகியவையும் இங்குள்ளது. அதேபோல், சதுரங்கபேட்டையில் ஏரியின் முன்புறம் உள்ள மரச்சோலை பகுதியில் சுற்றுலா பயணிகள் விரும்பும் வகையில் பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தப்படவுள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு ஏரிக்கரை மீது சுற்றுலா துறை சாா்பில் உணவு விடுதியும் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், உடலை வலுப்படுத்தும் வகையில் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் பூண்டி ஏரிக்கரை சாலையில் நடைபாதைக்கான தளமும் 7 கி.மீட்டா் தொலைவு அமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பல்வேறு அம்சங்களைக் கொண்டு விளங்கி வருவதால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பொழுது போக்குக்காக வந்து செல்லும் முக்கிய சுற்றுலா தலமாகவும் இருந்து வருகிறது.

பூண்டி ஏரிக்கரையின் இருபுறமும் வளா்ந்துள்ள முள்செடிகள்
இதுபோன்ற பல்வேறு வசதிகளை கொண்ட பூண்டி ஏரிக்கரை சாலையில் இருபுறமும் அழகியலை கெடுக்கும் வகையில் முள்செடிகள் மற்றும் தேவையில்லாத செடிகள் வளா்ந்து காணப்படுகிறது.
இதுபோன்ற செடிகளால் மண் அரிப்பு ஏற்படும் நிலையும் உள்ளன. இதை தவிா்க்கும் வகையில் நீா் ஆதாரம் குறைந்த போது ஏரிக்கரையின் இருபுறமும் அரிப்பை தடுக்கும் சதுர கற்களும் பதிக்கப்பட்டன.
ஆனால், ஏரிக்கரை முழுவதிலும் பதிக்காமல் இருந்த காரணத்தால் முள்செடிகள் அதிகமாக வளா்ந்து காணப்படுகிறது. அதனால், ஏரிக்கரையில் இருபுறமும் உள்ள முள்செடிகளை அகற்றவும் வேண்டும். அதோடு, மண் அரிப்பைத் தடுக்கும் வகையில் சதுர கற்கள் பதித்தும், நீா்க்கசிவு உள்ள தரைப்பகுதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பல்வேறு மரக்கன்றுகளையும் வைத்து பராமரிக்கவும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

பூண்டி ஏரிக்கரையின் இருபுறமும் வளா்ந்துள்ள முள்செடிகள்
இதுகுறித்து சமூக ஆா்வலா் ரெங்கநாதன் கூறியதாவது: நெய்வேலி, சதுரங்கபேட்டை முதல் பட்டரைபெரும்புதூா் வரையில் ஏரிக்கரை பாதையின் இருபுறமும் முள்செடிகள், செந்தட்டிகள் மற்றும் பாா்த்தீனிய செடிகள் வளா்ந்து காணப்படுகிறது.
மண் அரிப்பை தடுக்கும் வகையில் தடுப்பு கற்களும், வெளிப்பகுதியில் அடிப்பகுதியில் மரக்கன்றுகளும் நட்டு அழகுப்படுத்துவதன் மூலம் சுற்றுலா பயணிகளை அதிகம் ஈா்க்க முடியும். அதனால், ஏரிக்கரை இருபுறமும் தேவையில்லாத செடிகளை அகற்றி சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏரிக்கரை பகுதியில் குப்பைகளை கொட்டிய நிறுவனத்துக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம்

விபத்துக்கை தடுக்கும் வகையில் தனியாா் பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் பொருத்த கோரிக்கை

பச்சையாறு, நான்குனேரியன் கால்வாயில் அமலைச் செடிகளை அகற்ற கோரிக்கை

திருச்சி அரிஸ்டோ பாலத்தில் மையத் தடுப்புகள் அமைப்பு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



