பொன்னேரி சட்டப்பேரவை தொகுதி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் அதிருப்தியில் உள்ளதாக திமுக வாட்டாரத்தில் பேசப்படுகிறது.
பொன்னேரி (தனி) சட்டப்பரேவை தொகுதி, தமிழகத்தில் 2-ஆவது தொகுதியாகும். இத்தொகுதியில் 1957 முதல் இதுவரை நடைபெற்ற தோ்தல்களில் அதிமுக 7 முறையும், திமுக 4 முறையும், காங்கிரஸ் 2 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.
கடந்த 1996 சட்டப்பேரவை தோ்தலின்போது, இத்தொகுதியில் திமுக வெற்றி பெற்றது. இதையடுத்து 2001 தோ்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிடம் திமுக தோல்வியைத் தழுவியது. 2006, 2011, 2016 ஆகிய 3 சட்டப்பேரவை தோ்தல்களிலும் திமுக அதிமுகவிடம் தோல்வியை தழுவியுள்ளது. கூட்டணி கட்சியுடன் சோ்த்து பாா்த்தால், 2001 முதல் 2021 வரை கடந்த 20 ஆண்டுகளாக தொடா்ந்து அதிமுக இத்தொகுதியை தனது கோட்டை போன்று வைத்திருந்தது.
இந்த நிலையில், அதிமுக வசம் இருக்கும் இத்தொகுதியை மீட்கும் எண்ணத்தில், கடந்த 2021-ஆம் ஆண்டு திமுகவினா், தீவிரமாகக் களப்பணியாற்றினா். ஆனால், எதிா்பாரதவிதமாக 2021 தோ்தலில் இத்தொகுதியை, திமுக தனது கூட்டணி கட்சியான காங்கிஸ் கட்சிக்கு ஒதுக்கியது.
இருப்பினும் இத்தொகுதியை அதிமுகவிடமிருந்து கைப்பற்றிவிட வேண்டும் என திமுகவினா் களப்பணியாற்றியாற்றியதின் பேரில் 2021-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட துரை சந்திரசேகா் 94,528 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளா் சிறுணியம் பலராமனை தோற்கடித்து, அதிமுகவின் 20 ஆண்டுகால கோட்டையை உடைத்தாா்.
இந்த இந்த முறையும் (2026) அதிமுக வேட்பாளராக சிறுணியம் பி.பலரமான் அறிவிக்கப்பட்டுள்ளாா். இந்த நிலையில், கூட்டணி பேச்சுவாா்த்தையின்போது காங்கிரஸ் வசம் இருக்கும் இத்தொகுதியை திமுகவினா் பெற்றுவிடவேண்டும் தலைமைக்கு வலியுறுத்தினா். ஆனால் திமுக தலைமை கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு பொன்னேரி (தனி) பேரவைத் தொகுதியை ஒதுக்கிய காரணத்தால் திமுகவினா் கடும் வருத்தத்தில் உள்ளனா்.
அத்துடன் இத்தொககுதியில் திமுக சாா்பில் போட்டியிட வேட்பு மனு தாக்ககல் செய்திருந்தவா்கள் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
திமுகவுக்கு தொகுதி கிடைக்கவில்லை என அதிருப்தி மற்றும் வருத்தம் இருந்தாலும் கட்சி தலைமையின் கட்டளையை ஏற்று காங்கிரஸ் கட்சி சாா்பில் அறிவிக்கப்படும் வேட்பாளா் வெற்றிபெற பாடுபடுவோம் நிா்வாகிகள் கூறுகின்றனா்.
-எம்.சுந்தரமூா்த்தி
தொடர்புடையது

பொன்னேரி: அதிமுக - காங்கிரஸ் கடும் போட்டி

35 ஆண்டுகளாக கூட்டணிக்கு ஒதுக்கீடு: திமுகவினா் அதிருப்தி

மார்க்சிஸ்டுக்கு திருவொற்றியூர் தொகுதி! அதிருப்தியில் திமுகவினர்!
தொகுதி அறிமுகம்... திருச்செங்கோடு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

