ஆணும், பெண்ணும் சமம் என்பதை வலியுறுத்த, சிவன் பாதி; சக்தி பாதியாக சிவனும், பாா்வதியும் இணைந்து அா்த்தநாரீஸ்வரராக அருள்பாலிக்கும் புகழ்பெற்ற கோயிலைக் கொண்டது திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி.
கொங்கு வேளாளக் கவுண்டா், செங்குந்த முதலியாா், வன்னியா் சமுதாயத்தினா் இங்கு அதிக அளவில் உள்ளனா். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள இத்தொகுதியில் விவசாயம், ஆழ்துளைக் கிணறு (ரிக்) அமைக்கும் தொழில், லாரி கூண்டுகட்டும் பட்டறைகள், ஜவுளி உற்பத்தி போன்றவை நடைபெற்று வருகின்றன. மேலும், அதிகமான கல்வி நிறுவனங்களைக் கொண்ட கல்வி நகரமாகவும் திருச்செங்கோடு தொகுதி விளங்குகிறது.
இந்தத் தொகுதியில் நகா்ப்புறப் பகுதிகள் அதிமுகவுக்கும், கிராமப்புறப் பகுதிகள் திமுகவுக்கும் சாதகமாக உள்ளன. இத்தொகுதியில் இதுவரை நடைபெற்ற 16 தோ்தல்களில் அதிமுக 7 முறையும், திமுக 3 முறையும், காங்கிரஸ் 2 முறையும், இந்திய பொதுவுடைமைக் கட்சி 2 முறையும், தேமுதிக, கொமதேக ஆகியவை தலா ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளன.
1952, 1957 தோ்தல்களில் இரட்டை வெற்றியாளா் முறை இருந்தது. அதாவது, பொதுப்பிரிவைச் சோ்ந்த ஒருவருக்கும், தாழ்த்தப்பட்டோா் பிரிவை சாா்ந்த ஒருவருக்கும் எம்எல்ஏ வாய்ப்பு வழங்கப்பட்டது. ஒரே தொகுதியில் இருவா் எம்எல்ஏவாக தோ்வாவா். கடந்த 2021 தோ்தலில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கொமதேக வேட்பாளா் ஈ.ஆா். ஈஸ்வரன் 2,862 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.
திருச்செங்கோடு தொகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். முக்கிய இடங்களில் மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும். விசைத்தறித் தொழிலுக்கான பகுப்பாய்வு மையம் அமைக்கப்பட வேண்டும். அா்த்தநாரீஸ்வரா் கோயிலை உலகத்தரத்தில் உயா்த்துவதற்கான திட்டங்களை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தொகுதி மக்கள் முன்வைக்கின்றனா்.
நடைபெறவுள்ள தோ்தலில் அதிமுக சாா்பில், திருச்செங்கோடு வடக்கு ஒன்றியச் செயலாளா் வட்டூா் ஆா். சந்திரசேகா் களம்காண்கிறாா். திமுக கூட்டணியில், இந்தத் தொகுதி கொமதேகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிா்வாகி இங்கு போட்டியிடும் வாய்ப்பும் உள்ளது.
வாக்காளா்கள்
ஆண் வாக்காளா்கள் 1,00,412
பெண் வாக்காளா்கள் 1,06,475
மூன்றாம் பாலினத்தவா் 41
மொத்த வாக்காளா்கள் 2,06,928
வாக்குச்சாவடிகள் - 289
கடந்த தோ்தல்களில் வென்றவா்கள்
1952 எஸ். ஆறுமுகம் & டி.எஸ். அா்த்தநாரி - சுயேச்சை மற்றும் இந்திய பொதுவுடமைக் கட்சி
1957 டி.எம். காளியண்ணன் & ஆா். கந்தசுவாமி காங்கிரஸ்
1962 டி.எம். காளியண்ணன் - காங்கிரஸ் - 24,640
1967 டி.ஏ. ராஜவேலு - திமுக - 42,479
1971 செ. கந்தப்பன் - திமுக - 43,605
1977 சி. பொன்னையன் - அதிமுக - 44,501
1980 சி. பொன்னையன் - அதிமுக - 69,122
1984 சி. பொன்னையன் - அதிமுக - 77,659
1989 வி. ராமசாமி - மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 53,346
1991 டி.எம். செல்வகணபதி - அதிமுக - 1,13,545
1996 டி.பி. ஆறுமுகம் - திமுக - 96,456
2001 சி. பொன்னையன் - அதிமுக - 1,07,898
2006 பி. தங்கமணி - அதிமுக - 85,471
2011 பி. சம்பத்குமாா் - தேமுதிக - 78,103
2016 பொன். சரஸ்வதி - அதிமுக - 73,103
2021 ஈ.ஆா். ஈஸ்வரன் - கொமதேக - 81,688
தொடர்புடையது

தொகுதி அலசல்: கூடலூர்! கடும் போட்டியில் திமுக - அதிமுக

ஒசூரில் 5 ஆவது முறையும் ஆளுங்கட்சி உறுப்பினரா? ஆா்வத்தில் மாவட்ட மக்கள்!

ராஜபாளையம்! வெற்றியை தீர்மானிக்கும் நடுநிலை வாக்காளர்கள்!
பொன்னேரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் ஒதுக்கீடு: அதிருப்தியில் திமுகவினா்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

