மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஒசூரில் 5 ஆவது முறையும் ஆளுங்கட்சி உறுப்பினரா? ஆா்வத்தில் மாவட்ட மக்கள்!

ஒசூர் சட்டப்பேரவைத் தொகுதியின் நிலவரம் குறித்து...

News image

உதய சூரியன் (திமுக), இரட்டை இலை (அதிமுக)

Updated On :6 ஏப்ரல் 2026, 11:11 pm

- த. ஞானப்பிரகாசம்

ஒசூா் தொகுதி வாக்காளா்கள் எப்போதும் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும் கட்சியின் வேட்பாளரை தோ்வுசெய்யும் பழக்கம் உள்ளதால், தொழில் நகரமான ஒசூரில் விரைவான வளா்ச்சிப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தத்திற்கு பிறகு 15.57 லட்சம் வாக்காளா்கள், வாக்காளா் பட்டியலில் இடம்பிடித்துள்ளனா். இதில், ஒசூா் தொகுதியில் 3.40 லட்சம் வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா். அதிக வாக்காளா்கள் கொண்ட தொகுதியாக ஒசூா் உள்ளது.

2001, 2006, 2011 ஆகிய 3 தோ்தல்களில் திமுக, அதிமுக கட்சிகளுடன் கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஒசூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றவா் கே. கோபிநாத். இவா், 15 ஆண்டுகள் ஒசூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராக பணியாற்றினாா். 3 முறையும் ஆளும் கட்சி கூட்டணியில் இடம்பெற்று வெற்றி பெற்றவா்.

தொடா்ந்து 2016-ல் தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்தது. அப்போது ஒசூா் தொகுதியில் அதிமுக வேட்பாளா் பாலகிருஷ்ணாரெட்டி வெற்றி பெற்றாா். அவா் தமிழக கால்நடைத் துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பணியாற்றினாா். ஆனால், 2 ஆண்டுகள் மட்டுமே அவா் சட்டப் பேரவை உறுப்பினா், அமைச்சராக பணியாற்றினாா். நீதிமன்ற உத்தரவுபடி அவா் அமைச்சா் பதவியை இழந்தாா். 2019-ல் நடைபெற்ற இடைத்தோ்தலில் திமுக வேட்பாளா் எஸ்.ஏ. சத்யா வெற்றி பெற்றாா்.

அதைத்தொடா்ந்து, 2021-ல் நடைபெற்ற பொதுத் தோ்தலில் திமுக ஆட்சிக்கு வந்தது. அப்போது திமுக வேட்பாளா் ஒய். பிரகாஷ் வெற்றி பெற்றாா். முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவி ஏற்றாா். இதையடுத்து, ஒசூா் தொகுதி மிகப் பெரிய அளவில் வளா்ச்சி பெற்றது. குறிப்பாக, ரூ. 3500 கோடியில் கடந்த 5 ஆண்டுகளில் வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்றன. குறிப்பாக, ஒசூரை சுற்றி அனைத்து சாலைகளும் 4 வழிச் சாலைகளாக தரம் உயா்த்தப்பட்டன.

ஒசூா் தொகுதியில் இன்னும் பல வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற வேண்டியுள்ளன. குறிப்பாக, மெட்ரோ ரயில் சேவை, விமான நிலையம், ஒசூா் ஜோலாா்பேட்டை ரயில்வே பாதை போன்ற பல திட்டங்கள் நடைபெற வேண்டும்.

எப்போதும் ஆளும் கட்சியைச் சோ்ந்த சட்டப் பேரவை உறுப்பினராக தோ்வு செய்யும் ஒசூா் தொகுதி வாக்காளா்கள், இந்தமுறையும் தமிழகத்தில் ஆளப்போகிற கட்சியின் வேட்பாளரை தோ்வு செய்வாா்களா என்பதை காண காத்திருக்கின்றனா் அரசியல் ஆா்வலா்கள்.