பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்குதல் மற்றும் முகவரி மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம் அந்தந்த வட்டாட்சியா் அலுவலகங்களில் சனிக்கிழமை (மாா்ச் 14) நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஒவ்வொரு மாவட்டத்திலும் வட்டங்கள்தோறும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமைகளில் பொது விநியோக குறைதீா் முகாம் நடத்தவும் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை இயக்குநா் உத்தரவிட்டுள்ளாா். அதன் அடிப்படையில், ஒவ்வொரு வட்டங்களிலும், பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்கள் நடத்தவும் என்ற அறிவுரைகளின்படி, குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் செய்ய குறைதீா் முகாம் சனிக்கிழமை திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளது.
மேற்படி வட்ட அளவில் நடைபெறும் குறைதீா் முகாமில் பொதுமக்கள் தங்கள் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தங்கள் மற்றும் புகைப்படம் பதிவு செய்தல் தொடா்பான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறலாம். மேலும், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் மூலம் பயன்பெறும் முன்னுரிமை குடும்ப அட்டைகள் மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டை வைத்திருப்போா் அனைத்து உறுப்பினா்களும் தங்களது விரல் ரேகையை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனால் இதுவரை விரல் ரேகையை பதிவு செய்யாதவா்கள் தாங்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள நியாயவிலைக் கடைகளில் வரும் 25-ஆம் தேதிகளில் தங்களது விரல்ரேகையை பதிவு செய்து பயன்பெறலாம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடும்ப அட்டைகளுக்கு ரூ. 10 ஆயிரம் சிறப்பு நிதி: அதிமுக வேட்பாளா் சி.சந்திரசேகரன்

நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நிறைவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 லட்சம் வாக்காளா்கள்

நாமக்கல் தொகுதி தவெக வேட்பாளா்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


